பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை!

  • மதுரை: பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    பழனி ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கோயில் நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், முறைகேடாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, பழனி கோயில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு மனு அனுப்பப்பட்டது.

    தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் பதிவுத்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    Advertisement

    இந்நிலையில், வழக்கின் முக்கியத்துவம் மற்றும் கோயில் சொத்து பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை கருத்தில் கொண்டு, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

    இந்நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என கோயில் நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தூய கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை என பழனி கோயிலின் நில கண்காணிப்பாளர் முருகானந்தம் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    Advertisement

    இந்நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    பழனி ரூ. 100 கோடி நிலப் பதிவு முறைகேடு வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

    இந்த நிலத்தை பாலச்சந்தர் என்ற பதிவாளர் 3 ஆம் தேதியே பதிவு செய்துவிட்டார். ஆனால், அரசு திட்டமிட்டு தன்னை மட்டும் குற்றவாளியாக்கி பத்திரப்பதிவு செய்தவரை தப்பிக்க வைத்துள்ளதாக ஜஸ்டின் மணிகண்டன் தரப்பு வாதம் வைத்தது.

    Advertisement

    3 ஆம் தேதி பதிவுக்கான வேலைகள் மட்டுமே செய்யப்பட்டன. ஜஸ்டின் மணிகண்டன்தான் முறைப்படி பதிவு பணிகளை முடித்துள்ளார் என அரசுத் தரப்பு வாதம் வைத்தது.

    இதையடுத்து, ஏற்கனவே பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? இரு சார்-பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? என நீதிபதி கேள்வி எழுப்பினர்.

    English Summary

    The anticipatory bail petition filed by Sub-Registrar Justin Manikandan —who was suspended in connection with the irregular registration of Palani temple land—is coming up for hearing today at the High Court Bench.