தஞ்சை கோவில் நிலத்தில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் உத்தரவு

  • மதுரை: தஞ்சாவூர் மாமவட்டம் கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் அருகே கோவில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியாக இன்று உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    மதுரை மாவட்டம் எழுமலை பகுதியை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் 'தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் அருகே பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கோவில் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1990ல அறநிலையத்துறை அனுமதியின்றி இந்த சிலை நிறுவப்பட்டது. இதனால் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை 4 வாரத்தில் அகற்ற வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.

    English Summary

    The Madurai high court has issued a decisive order today to remove the statue of Periyar, which stands on temple land near the Brahma Sira Kandeeswarar Temple in Kandiyur, Thanjavur district.