மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை.. எடப்பாடி பழனிசாமி வந்துபோது இருண்ட கருவறை!

  • மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற நிலையில், கோயில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 10 நிமிடங்களுக்கும் மேல் மின்வெட்டு நீடித்துள்ளது.

    Advertisement

    தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தற்போது மீனாட்சி அம்மன் கோயில் மின்தடை ஏற்பட்டிருப்பது பக்தர்களை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. மின்வெட்டு பிரச்சனையை சீக்கிரமாக அரசு சரி செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

    Advertisement

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தவெக ஆட்சியில் மக்கள் நிம்மதியாய் சாமி கூட கும்பிட முடியவில்லை. தமிழகத்தில் மின்தடை இருக்கிறது என்பதற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட மின்தடையே சாட்சி" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Power Cut at Meenakshi Temple: A sudden power outage occurred at the Meenakshi Amman Temple today while AIADMK General Secretary Edappadi Palaniswami was visiting the premises. The power cut lasted for more than 10 minutes.