மின்துறை அமைச்சர் மாவட்டத்திலேயே இப்படியா? இருளில் மதுரை சோழவந்தான்! 8 மணிநேரத்துக்கு மேலாக மின்தடை

  • மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 8 மணிநேரம் கடந்தும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவாகியும் மின்சாரம் வராத நிலையில் பள்ளி வாசல் நிகழ்ச்சி ஜெனரேட்டர் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு மின்வெட்டால் வீட்டில் உள்ள பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    Advertisement

    மதுரை மாவட்டம் சோழவந்தான் என்பது மிகவும் முக்கியமான இடமாகும். இங்குள்ள பெரிய கடை வீதி, கமாராஜர் தெரு, பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களை சுற்றி சுமார் 8 மணிநேரத்தை தாண்டி மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

    Advertisement

    இன்று மதியம் சுமார் 12.45 மணிக்கு மின்சாரம் தடைப்பட்ட நிலையில் தற்போது வரை வரவில்லையாம். இந்த தொடர் மின்தடைக்கு டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நீண்ட நேர மின்தடையால் மொத்த ஏரியாவும் இருள் சூழ்ந்து உள்ளது.

    சுமார் 8 மணிநேரத்தை தாண்டி மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் வராத நிலையில் அங்குள்ள பள்ளிவாசல் சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஜெனரேட்டர் உதவியுடன் நடத்தப்பட்டது.

    இதுபற்றி அந்த பகுதியில் வசித்து வரும் ஒருவர் கூறுகையில் ''மதியம் 12.45 மணிக்கு மின்சாரம் போனது. ட டிரான்ஸ்பார்மர் புகைந்து போய்விட்டது. இன்று மின்சாரம் வராது என்று மாலை 5 மணிக்கு வந்து சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். காமராஜர் தெருவில் இருந்து பள்ளிவாசல் வரை இந்த பகுதி முழுவதும் மின்சாரம் இல்லை'' என்று கஷ்டத்தை கூறினார்.

    Advertisement

    இன்னொருவர் கூறுகையில், ''பள்ளி வாசலில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. முன்அறிவிப்பு இன்றி 8 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் கூடியிருக்கும் இடத்தில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது? கரண்ட் எப்போது வரும் என்று கேட்டால்.. இப்போது வரும்.. இப்போது வரும் என்கிறார்கள். ஆனால் மின்சாரம் வரவேயில்லை. திமுக ஆட்சியில் இப்படி நடந்ததே இல்லை.'' என்றார்.

    மேலும் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் சிடிஆர் நிர்மல் குமார் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இப்படி இருக்கும் அவரது மாவட்டத்தில் உள்ள சோழவந்தானில் 8 மணிநேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

    English Summary

    A power outage has persisted for over eight hours in Sholavandan, Madurai district, causing severe hardship to the public. With electricity yet to be restored even after nightfall, a mosque event is being conducted with the help of a generator. Meanwhile, residents are facing great difficulty at home due to the blackout.