ஆட்சி மாறிய பின்.. ஆமை வேகத்தில் நடக்கும் மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள்! தற்போதைய நிலவரம் என்ன?

  • மதுரை: மதுரையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே டைடல் பார்க் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திமுக ஆட்சியின் போது 2026ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் டைடல் பார்க்கின் தற்போதைய நிலை என்ன என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    திமுக ஆட்சியில் மதுரைக்கு கொண்டு வரப்பட்ட மிகமுக்கியமான திட்டம் மதுரை டைடல் பார்க். ஏனென்றால் சென்னை, கோவை மாவட்டங்களுக்கு பின் மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படுவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டைடல் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டாலும், சுற்றுச்சூழல், கட்டுமான அனுமதி, டெண்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முடிக்கவே 2025 வரை காலம் பிடித்தது.

    Advertisement

    இதன்பின் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் திறக்க முயற்சிப்போம் என்று கூறப்பட்டது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் முதற்கட்டமாக ரூ.289 கோடி மதிப்பீட்டில் 12 தளங்காளுடன் 5.67 லட்சம் சதுர அடியில் அமைகிறது. திமுக ஆட்சியின் போதே முதல் 5 தளங்கள் வரை பணிகள் முழுவீச்சில் நடந்தன.

    ஆனால் தவெக ஆட்சி அமைந்த பின் டைடல் பார்க் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது வரை டைடல் பார்க் மொத்தமாக 7 தளங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 8வது தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 4 தளங்கள் அமைக்கப்பட சுமார் 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    அதன்பின் வொயரிங் மற்றும் பிளம்பிங் பணிகளும், உட்கட்டமைப்பு பணிகளும் நடக்க இருக்கின்றன. இதனால் 2027 அல்லது 2028 தொடக்கத்தில் தான் டைடல் பார்க் பணிகள் நிறைவு பெற்று திறந்து வைக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சியின் போது தொழில் துறை அமைச்சராக இருந்த டிஆர்பி ராஜா தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டார்.

    ஆனால் தற்போதைய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இன்னும் ஒருமுறை கூட கட்டுமான பணிகளை ஆய்வு செய்யவில்லை. இதனால் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், கால தாமத்துடன் பணிகளை முடிக்கலாம் என்ற எண்ணம் வந்துவிட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

    Advertisement

    இந்த டைடல் பார்க் பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டால், சுமார் 6 ஆயிரம் இளைஞர்களுக்கு மதுரையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் மதுரை தொழில்துறையிலும், ஐடி துறையிலும் முன்னேற்றம் அடையும். இதனால் தவெக ஆட்சியில் டைடல் பார்க் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

    English Summary

    Promised for 2026, Delayed Now: What Is the Current Status of Madurai TIDEL Park?