ஓரங்கட்டப்படும் தளபதி.. என்ட்ரி கொடுத்த பிடிஆர்.. மதுரையில் மாறும் திமுகவின் பவர் சென்டர்!

  • மதுரை: திமுகவில் முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் ஆக்டிவாக அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 4 மாதங்களாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சூழலில், தற்போது சில நாட்களாக ஆதரவாளர்களை வீட்டில் வைத்து சந்திக்க தொடங்கி இருக்கிறார்.

    Advertisement

    திமுக ஆட்சியின் போது நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பின்னர் ஐடி துறைக்கு பொறுப்பு வகித்தார். மதுரையில் அவருக்கு அதிகாரம் இல்லாததால், திமுக நிர்வாகிகள் மத்தியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கான செல்வாக்கு குறைந்தே இருந்தது. சட்டசபைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் 3வது முறையாக போட்டியிட்டு பிடிஆர் தோல்வி அடைந்தார்.

    Advertisement

    இந்த தோல்வியால் துவண்டுபோன பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சில மாதங்களுக்கு தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கேற்ப பல்வேறு நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பயணித்து வந்தார். தேர்தல் தோல்விக்கு பின் ஸ்டாலினை கூட நேரில் சென்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திக்கவில்லை.

    இதனால் சில நாட்களில் மொத்தமாக அரசியலில் இருந்தே விலக முடிவு எடுத்துவிட்டதாக பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் தான் கலைஞர் நினைவு நாளன்று அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மீண்டும் கட்சிப் பணிகளை தொடங்கினார். அதேபோல் தனது ஆதரவாளர்களை வீட்டிலும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    Advertisement

    இதன் பின்னணியில் திமுக மறுசீரமைப்பு நடவடிக்கைகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. மாவட்டச் செயலாளருக்கு 70 வயது என்று வரம்பு நிர்ணயித்ததோடு, மாநகரச் செயலாளர் என்ற பதவியும் இனி கிடையாது என்று திமுக தலைமை அறிவித்துவிட்டது. இதனால் மதுரை முன்னாள் எம்எல்ஏ தளபதியின் அதிகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    அவர் 70 வயதை கடந்துவிட்டதால், மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியும் அளிக்கப்படாது என்று தெரிகிறது. மதுரையில் 10 தொகுதிகள் இருக்கும் நிலையில், மணிமாறனுக்கு மட்டுமே மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்படலாம். மூர்த்தி 15 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்துவிட்டதால், அவருக்கு தலைமை கழக பொறுப்பு அளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புதிய தெம்புடன் இருக்கிறார். ஏனென்றால் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று நியமனம் செய்யப்பட்டால், மதுரை மத்திய தொகுதி மற்றும் வடக்கு தொகுதி ஒரு மாவட்டமாக பிரிக்கப்படும். இதன் மூலமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் செல்வாக்கை எட்ட முடியும். இதனால் அவரது ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர் பதவி கேளுங்கள் என்று அறிவுறுத்தி வருவதாக திமுகவினர் முனுமுனுக்கின்றனர்.

    English Summary

    PTR Palanivel Thiagarajan: DMK Former Minister PTR Palanivel Thiagarajan Resumes Active Politics After 4-Month Hiatus