மதுரை: தென் மாவட்டங்களுக்கு என்று தனியாக ஒரு முதலமைச்சர் போல் சிடிஆர் நிர்மல்குமார் நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தவெக ஆட்சி அமைத்த நாள் முதலே திருப்பரங்குன்றம் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுவை ராஜினாமா செய்ய வைக்க கூடுதல் அழுத்தம் கொடுத்த வருவதாகவும் சாடி இருக்கிறார்.
அண்மையில் நடந்த மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான சொதப்பல்கள் அரங்கேறின. விஐபி பாஸ் விற்பனை தொடங்கி கோபுரங்களுக்கு அருகில் கூட பக்தர்கள் அனுமதிக்கப்படாதாது, குடமுழுக்கு புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்காமல், குழாய் நீரை போலீசார் மூலம் தெளித்தது என்று ஏராளமான கொடுமைகள் அரங்கேறின.
இதனால் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதேபோல் அறங்காவலர் குழுவுக்கும், அறநிலையத்துறைக்கும் தொடக்கம் முதலே மோதல் இருந்து வந்தது. பத்திரிகையில் அறங்காவலர் குழுவினர் பெயரை போடவே நீதிமன்றம் வரை சென்றனர். இதனால் மீனாட்சியம்மன் கோயில் விவகாரத்தில் தவெக அரசியல் செய்வதாக கொந்தளித்து வருகின்றனர். அதிலும் அறநிலையத்துறையை விடவும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் செயல்பாடுகள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மதுரை மாவட்டத்தில் தன்னை மீறி எதுவும் நடக்க கூடாது, எது நடந்தாலும் என் மீதே கவனம் இருக்க வேண்டும் என்பதில் நிர்மல்குமார் தீவிரமாக இருக்கிறார். இந்த நிலையில் சிடிஆர் நிர்மல்குமார் மீது திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் ஆகிய 2 கோயில்களின் அறங்காவலர் குழுவையும் ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று கூடுதல் அழுத்தம் கொடுத்து வருகிறார். என் தாய் ருக்மணியை ராஜினாமா செய்ய கோரி இணை ஆணையர் பேசுகிறார். தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து இப்படிதான். மதுரை முதல் கன்னியாகுமரி வரை தனி முதல்வர் இருப்பதை போல் நிர்மல்குமர் நடந்து கொள்கிறார். இது முதல்வர் விஜய்யின் ஆதரவுடன் நடக்க முடியாது. அவருக்கு வேலையில் இந்த மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்த போகிறாரா.. நிர்மல்குமாரின் மிரட்டல் காரணமாகவே என் அம்மாவை ராஜினாமா செய்ய இணை ஆணையர் சொல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.