தவெகவின் முதல் பட்ஜெட்.. கப்சிப் மோடில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.. திமுகவில் நடப்பது என்ன?

  • மதுரை: தவெகவின் முதல் பட்ஜெட் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சைலண்ட் மோடில் இருப்பது அக்கட்சியின் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு பின் அரசியலில் இருந்து சில காலம் விலகி இருந்தாலும், எக்ஸ் தளத்தில் கூட எந்த பதிவையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

    Advertisement

    தேசிய அளவில் பாஜகவின் கொள்கைகளையும், மத்திய பட்ஜெட்டையும் கடுமையாக விமர்சிக்கும் திமுகவின் முகமாக இருந்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். திமுக ஆட்சி அமைத்த போது 2 ஆண்டுகள் நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பின்னர் ஐடி துறையை மட்டும் கவனித்து வந்தார். அவரின் அமைச்சரவை மாற்றத்திற்கு கட்சியினரின் அதிருப்தியும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

    Advertisement

    இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதியில் 3வது முறையாக களமிறங்கிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தவெக வேட்பாளர் முஸ்தபாவிடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்வி காரணமாக சோகம் அடைந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கி ஓய்வு எடுக்க உள்ளதாக அறிவித்தார். இதன்பின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    தேசிய அளவில் மீண்டும் தன்னுடைய நண்பர்களை சந்தித்து வருகிறார். புத்தக வெளியீடு, நண்பர்கள் சந்திப்பு என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இருப்பினும் தவெக சார்பாக கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

    Advertisement

    அப்போது முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தவெகவை விளாசி தள்ளினார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சு திமுகவினர் மத்தியில் அதிக டிரெண்டாகியது. இந்த நிலையில் தவெகவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசி இருந்தாலும், பலரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கருத்தை எதிர்பார்த்தனர்.

    குறைந்தபட்சம் எக்ஸ் தளத்தை பதிவை வெளியிடுவார் என்று காத்திருந்தனர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. இதனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் சோகம் அடைந்திருக்கின்றனர்.

    Advertisement

    திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கை நிறைவடைந்த பின்னரே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ப மதுரையில் மாவட்டச் செயலாளர் தளபதி மற்றும் மூர்த்தி ஆகியோரின் அதிகாரங்களை குறைக்க திமுக திட்டமிட்டு வருகிறது. இதனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலைப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.

    English Summary

    PTR Palanivel Thiagarajan: Former Minister PTR Palanivel Thiagarajan Stays Silent on TVK's Maiden Budget, DMK Cadres Disappointed