ஜெயிலர் 2ஐ பந்தாடும் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. ரூட் மீடியா வேலையை ஆரம்பிச்சுட்டாங்க! அதிமுக மாஜி கவலை!

  • மதுரை: விஜய்யை எதிர்த்து பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் என்றாலும் சரி, திரை உலகில் உள்ளவர்கள் என்றாலும் சரி, யாராக இருந்தாலும் அவர்களை மட்டம் தட்டுவது தான் ரூட் மீடியாவின் வேலையாக இருக்கிறது எனவும், ஜனாநாயன் படம் தோற்றதால், ஜெயிலர் படத்தை விர்ச்சுவல் வாரியர்ஸ் விமர்சிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," தென்மேற்கு பருவமழை முழுவதுமாக விலகும் சூழல் உருவாகி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டில் 13 மில்லியன் நிலப்பரப்பு மற்றும் 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ள கொண்ட மாநிலமாகும் .

    Advertisement

    இயற்கை பேரிடர்களான சூறாவளி, புயல், வெள்ளப்பெருக்கு ,வறட்சி, ஆகியவற்றில் தமிழ்நாடு பாதிப்பு அடைந்திருப்பது நமக்கு கடந்த கால அனுபவங்கள் சாட்சியாக இருக்கிறது. எனவெ இந்தப் பேரிடர் காலங்களில் அரசு முழு கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்.

    ஆர்பி உதயகுமார்

    பேரிடர்களை மூன்று கட்டங்களாக பிரித்து செயல்பட வேண்டும் பேரிடர் வரும்முன், பேரிடர் நடக்கும் பொழுது, பேரிடர் முடிந்தபின் என மூன்று கட்டங்களாக வெளிப்போடு செயல்பட வேண்டும். பேரிடம் காலங்களில்,பேரிடர் அபாயம் குறித்தான தகவல்களை போர்க்கால அடிப்படையிலே இந்திய மாநில ஆய்வு மையம், இந்திய தேசிய தகவல் மையம் போன்ற அமைப்புகளிடம் இருந்து தகவல்களை உடனே பெற்று, பொதுமக்களுக்கு எச்சரிக்கை தகவல்களை தெரிவிப்பதற்கு அரசு விழிப்புணர்வோடு முழு கவனம் செலுத்த வேண்டும்.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை

    இதுவரை நமக்கு எந்த விதமான மழை வெள்ளம் போன்றவைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் கிடைக்கப்பெறவில்லை. இருந்தபோதிலும் கூட கடந்த கால அனுபவங்களை நாம் முன்மாதிரியாக வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

    விர்ச்சுவல் வாரியர்ஸ்

    விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று தவெகவில் உள்ளார்கள். அவர்கள் வடகிழக்கு பருவமழையில் முன்னெச்சரிக்கையை கொடுப்பதை விட்டு, விஜய்க்கு எதிராக ஜெயிலர் 2 படம் ரிலீஸாகி உள்ளதால், அந்த படத்தை திசை திருப்பும் வேலையில் விரிச்சுவல் வாரியர்ஸ் இறங்கி உள்ளனர். சூப்பர் ஸ்டாருக்கு எப்போதும் தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. பொது வாழ்வில் ஈடுபடுபவர் அனைவரையும் மதிக்கத் தெரிந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    Advertisement

    ஜெயிலர் 2

    இன்றைக்கு ஜெயிலர்-2 படம் ரிலீஸாகி மதுரை கூட திருவிழா போல உள்ளது. ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். யாரு வேணாலும் சி.எம். ஆகலாம் ஆனால் ரஜினிகாந்த் சி.எம். ஆக கூடாது என தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் க்ளத்தில் இறங்கி விட்டது. வடகிழக்கு பருவ மழையை பாதிப்பை தவெக அரசு மறக்க கூடாது. மக்கள் மீது உள்ள அக்கறையில் தான் இதை சொல்கிறோம். ஏற்கனவே ஜனநாயகம் படம் ஊத்திக்கிச்சு. இந்த கவலையில் தவெகவினர் இருப்பார்கள்.

    ரூட் மீடியா

    ரூட் மீடியாவின் ஒரே வேலை என்றால், விஜய்யை எதிர்த்து பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் என்றாலும் சரி, திரை உலகில் உள்ளவர்கள் என்றாலும் சரி யாராக இருந்தாலும் அவர்களை மட்டம் தட்டுவது தான் இந்த ரூட் மீடியாவின் வேலையாக செய்து வருகிறது. அதனால் தான் விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் பொழுது வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதை விட மக்களை ஏமாற்றிய ரூட் மீடியாவுடைய விரிச்சுவல் வாரியர்ஸ்க்கு நன்றி சொன்னார்." என்றார்.

    English Summary

    AIADMK leader RB Udhayakumar alleges TVK’s Virtual Warriors are targeting Jailer 2 and criticises Root Media over its coverage of Vijay.