ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்


  • மதுரை: முதலமைச்சர் கைக்கூலியை வைத்துக் கொண்டு அதிமுகவினரிடம் ஆசை வார்த்தை காட்ட வேண்டாம் எனவும், விஜய் நடத்தி வருகிற நாடகத்திற்கு இப்போது ஒரு உயிர் பலி போயிருக்கிறது. ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது என விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    அதிமுகவைச் சேர்ந்த 'பூக்கடை' மகேந்திரன், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்தவர். இவர் அஇஅதிமுக வர்த்தக அணியின் மாவட்ட இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

    Advertisement

    தொடர் தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சி மோதல்களால் மனமுடைந்து காணப்பட்ட இவர், கட்சியில் ஒற்றுமையை வலியுறுத்தும் உருக்கமான காணொளியை வெளியிட்டு, ஜூன் 1ஆம் தேதி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

    பூக்கடை மகேந்திரன்

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகேந்திரனின் இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குழந்தையின் ஒட்டுமொத்த கல்விச் செலவையும் அஇஅதிமுக ஏற்கும் என்றும், கட்சியின் சார்பில் ரூ.55 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

    ஆர் பி உதயகுமார்

    இந்நிலையில் விஜய்யின் செயல்பாடுகள் தான் இதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," எந்த பதவி சுகத்தையும் அனுபவிக்கிறாத எங்கள் உயிர் மகேந்திரா கழகம் காத்திட தன் உயிரை தியாகம் செய்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், தமிழர் குலசாமி அம்மா புரட்சித்தமிழர் எடப்பாடியார் என்று மக்கள் மன்றத்திலே சட்டமன்றத்திலே கழக மேடைகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விசுவாச தொண்டன் உச்சரித்த போது அது வெறும் வார்த்தைகள் அல்ல வரலாறு என்பதை நிரூபித்து காட்டியிருக்கிற மகேந்திரா உன் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    Advertisement

    விஜய்

    இனிமேலாவது ஆட்சி அதிகாரத்திலே இருக்கின்ற ஆட்சி அதிகாரத்தை புதிதாக பார்க்கின்ற முதல்வர் அவர்களே பதவியும், அதிகாரத்தையும் பணத்தையும் காட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விசுவாச உண்மை தொண்டர்களை விலை பேச முடியாது என்பதை இந்த உயிர் தியாகத்தின் மூலமாக நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். இனிமேலாவது உண்மை தொண்டர்களை விலை பேசுவதை, உங்கள் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு நீங்கள் நடத்தி வருகிற நாடகத்திற்கு இப்போது ஒரு உயிர் பலி போயிருக்கிறது.

    அதிமுக தொண்டர்

    கைக்கூலிகளை வைத்துக்கொண்டு முதல்வர் அவர்களே கழகத்தின் விசுவாச தொண்டர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி அதிகாரமும் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலே பங்கு, பணத்திலே பங்கு கொள்ளையிலே பங்கு என்று நீங்கள் கூத்தடிக்கிற இந்த கொடுமையை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் விசுவாச தொண்டன் தம்பி மகேந்திரன் தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது முதல்வர் அவர்களே. காலம் மாறும் காட்சிகள் மாறும். ஆட்சிகள் மாறும். மகேந்திரன் போன்ற கோடிக்கணக்கான விசுவாசதொண்டர்களை கொண்டு இருக்கிற எடப்பாடியார் தலைமையிலே மீண்டும் எழுகிற காலம் வெகு தொலைவில் இல்லை. ஆகவே கோடிக்கணக்கான மகேந்திரன் போன்ற விசுவாச தொண்டர்களுக்கு குதித்து எழுந்து உணர்ச்சி பெருக்கினால் என்ன நடக்கும் என்று எங்களால் சொல்ல முடியவில்லை.

    தவெக

    கழகத் தொண்டர்களின் உணர்ச்சியை இனியும் தூண்டி விடாதீர்கள் இப்போதாவது நீங்கள் இந்த அதிகாரம் ஆட்சி பதவி பட்டம் என்று நடத்துகிற அந்த கூத்துகளுக்கு எல்லாம் அந்த கூப்பாடுகளுக்கு எல்லாம் முடிவுரை எழுதுங்கள் தடை ஏற்படுத்துங்கள் இல்லை என்றால் விளைவுகள் விபரீதமாக போகும். மகேந்திரன் உயிர் பிரிகிறது" என கூறியுள்ளார்.

    English Summary

    RP Udhayakumar blames Vijay’s political moves after AIADMK functionary Mahendran’s death, issues sharp warning.