கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க.. முஸ்தபா மீது குற்றம்சாட்டிய செல்லூர் ராஜு!

  • மதுரை: தவெக எம்எல்ஏ முஸ்தபா ஒன்றும் யோக்கியனோ, ஹரிச்சந்திரனோ கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். முஸ்தபாவும், மன்னனும் மாசன் மச்சானை போல் நண்பர்கள் என்று கூறிய செல்லூர் ராஜூ, தீபாவளி நேரத்தில் மக்களின் அதிருப்தியை திசை திருப்ப தவெக இப்படியொரு திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

    Advertisement

    தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகி மன்னன் மீது மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்தார். அந்த புகாரில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ரூ.15 கோடியும், பின்னர் ரூ.15 கோடியும் வழங்கப்படும் என்று மன்னன் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மன்னன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    Advertisement

    இந்த விசாரணையின் முடிவில் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அதிமுக நிர்வாகி மன்னனை நேரில் பார்க்க செல்லூர் ராஜூ வந்தார். ஆனால் மன்னனை சந்திக்க செல்லூர் ராஜூவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் டென்ஷனான செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இன்ஸ்பெக்டர் சொல்லியும் எதுவும் கேட்கவில்லை.

    உடைஞ்சது திருமங்கலம் பார்முலா.. தவெக மட்டுமே தூயசக்தி.. கடம்பூர் ராஜூ சொல்லும் காரணம்

    முஸ்தபாவும், மன்னனும் நெருங்கிய நண்பர்கள். மாமன், மச்சான் என்று பழகக் கூடியவர்கள். அப்படி தற்செயலாக பேசிக் கொண்டிருக்கும் போது, என்ன மாப்ள.. கவுன்சிலர் சீட், நிர்வாகிகள் நியமனத்திற்கு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று காசு வாங்குவதாக ரீல்ஸ் வருதே.. என்ன என்று மன்னன் கேட்டுள்ளார். அதற்கு முஸ்தபா, ரயிலில் சென்று கொண்டிருந்தேன். பின்னர் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    இதனை வைத்து மன்னன் மீது பொய்யான வழக்கை போட்டுள்ளார்கள். ஏற்கனவே ஆசை வார்த்தை கூறி அமைச்சராக்குகிறேன் என்று குதிரை பேரம் செய்து ஆட்சியில் இருக்கிறார்கள். மக்களுக்கு எதுவும் செய்யாத ஒரு அரசு இது.. தற்குறி ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள். இதற்கிடையில் இந்த அரசை பணம் கொடுத்து ஒரு எம்எல்ஏ-வை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு கிடையாது.

    குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் கடுகளவும் இல்லை. நிர்வாக திறமையால் ஆட்சி அதுவாகவே கவிழும். முஸ்தபா ஒன்றும் யோக்கியன் கிடையாது.. அவர் ஒன்றும் ஹரிச்சந்திரன் கிடையாது. ஹரிச்சந்திரனுக்கு பக்கத்து வீடும் இல்லை.. மத்திய தொகுதியில் 22 வார்டுகள் இருக்கின்றன. 22 வார்டுகளிலும் நிர்வாகிகள் போடுவதற்கு அவரின் உதவியாளர் கனி ராஜா பேசும் ஆடியோ தான் வெளியாகி இருக்கிறது.

    Advertisement
    ஆத்துல நுரை வர ஷாம்பூ காரணமா? என்ன மட்டும் அந்த ஓட்டு ஓட்டுனீங்களே? நியாயம் கேட்கும் செல்லூர் ராஜூ!

    ஆட்சிக்கு எதிரான அவப்பெயரை இப்படி செய்து மறைக்கலாமா என்று நினைக்கிறார்கள். விலைவாசி உயர்வு, போராட்டம் என்று மறைக்கவே இப்படியான விஷயங்களை செய்கிறார்கள். மன்னனுக்கு ஏற்கனவே உடல்நிலை பிரச்சனை உள்ளது. ஒரே நாளில் நள்ளிரவில் கைது செய்து சிறையில் வைக்கும் அளவிற்கு மன்னன் ஒன்றும் தவெகவை போல் போதைப்பொருள் கடத்தவில்லை.

    முஸ்தபா ஒரு ஜாக்பாட் அடித்து வெற்றி பெற்றுவிட்டார். வென்ற பின் மக்கள் பணிகளில் ஈடுபடலாம். தவெக ஆட்சிக்கு வந்த மதுரைக்கு எந்த திட்டமும் இல்லை. அறிவிக்கப்படாத மின் வெட்டு இருக்கிறது.. இரவில் கொசுக்கடியில் தூங்க முடியவில்லை. கவுன்சிலர் சீட்டுக்கு ஏலம் விடுகிறார்கள்.. அதிகபட்சமாக ரூ.25 லட்சம் கொடுத்தால், வார்டு உறுதி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Sellur Raju Accuses TVK MLA Mustafa of Auctioning Councillor Tickets for ₹25 Lakh