மன்னன் மீது குறை சொல்லும் அளவுக்கு தவெக எம்எல்ஏ முஸ்தபா ஒன்றும் யோக்கியன் கிடையாது! செல்லூர் ராஜூ

  • மதுரை: தவெக எம்எல்ஏ முஸ்தபா ஒன்றும் யோக்கியனும், இல்லை, அரிச்சந்திரனும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக ஆட்சியை கலைக்க பேரம் பேசியதாக முஸ்தபா கொடுத்த புகாரின் பேரில் அதிமுக நிர்வாகி மன்னன் கைதான நிலையில் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தவெக எம்எல்ஏ முஸ்தபா ஒன்றும் யோக்கியனும் இல்லை, அரிச்சந்திரனும் இல்லை. மன்னன் பேச்சை திரித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Advertisement

    எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து தவெக அரசை கலைப்பது அதிமுகவின் நோக்கம் அல்ல. தவெக முஸ்தபாவும் அதிமுக மன்னனும் நல்ல நண்பர்கள் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    அது போல் மன்னன் கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான P.M. மன்னனை பொய் வழக்கில் கைது செய்துள்ள தவெக அரசின் ஏவல்துறைக்கு எனது கடும் கண்டனம்.

    குதிரை பேரம் நடத்தி, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக சட்டமன்ற உறுப்பினரை கடத்தி கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சி தான் தவெக.

    Advertisement

    "கீழ்மாடியில் ராஜினாமா- மேல்மாடியில் இணைப்பு"

    ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி, "தலைமைச் செயலகமா? பனையூரின் கிளை அலுவலகமா?" என்று மக்களே அருவருக்கும் வகையில், "கீழ்மாடியில் ராஜினாமா; மேல்மாடியில் இணைப்பு விழா" என்று நாடு காணாத கேவலத்தை அரங்கேறிய ஒரே கட்சி தவெக தான்.

    உலகெங்கும் வீழும் வலதுசாரி அரசியல்! டிரம்ப், நெதன்யாகு சரிவு உணர்த்துவது என்ன?

    வக்கில்லாத அரசு

    இந்த உண்மைகள் குறித்தெல்லாம் பேச வக்கில்லாத இந்த அரசு, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மூலம் ஒரு கட்டுக்கதையை புனைந்து, கழக நிர்வாகி திரு. மன்னன் அவர்களை கைது செய்து புதிய நாடகத்தை நடத்துவது வெட்கக்கேடானது.

    Advertisement

    பவர் சென்டர்

    முதல்வரை அணுக முடியாமல், பல Power center-களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு, தவெக ஆட்சி மீது ஆளுங்கட்சி MLA-க்கள் பலரே அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. சொந்த கட்சி MLA-க்களை சமாதானப் படுத்த வழி தெரியாமல், இப்படி ஒரு கதையை இந்த அரசு புனைந்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

    பாதிக்கப்பட்டவன் மீதே பழியை சுமத்தி குற்றவாளி பட்டம் கட்டும் பழைய தமிழ் சினிமா பார்முலா-வை அஇஅதிமுக மீது திணிக்கப் பார்க்கும் இந்த சினிமா ரீல்ஸ் அரசுக்கு, அதே கதையின் இறுதியில் எல்லா சாயமும் வெளுத்துப் போய் நிற்கப்போவது தாங்கள்தான் என்பது நினைவில் இருக்கட்டும்!

    Advertisement
    உங்களுக்கு கட்சி – அரசியல் எல்லாம் தேவையில்லை – விருது பெற்ற மாணவர்களிடம் நேரடியாக சொன்ன விஜய்

    தரம் தாழ்ந்த அரசியல்

    உடனடியாக மன்னன் அவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும், இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மன்னன் கைது

    தவெக ஆட்சியை கவிழ்க்க மதுரை மத்திய தொகுதியின் தவெக எம்எல்ஏ முஸ்தபாவுக்கு ரூ 30 கோடியை இரு தவணைகளாக தருவதாக பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகி மன்னனை மதுரை மாட்டுத்தாவணி அருகே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

    English Summary

    ADMK Ex minister Sellur Raju criticises TVK MLA Mustafa for allegation against Mannan that he bargain him to topple the TVK government.