அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்!

  • மதுரை: அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், "நீங்களும் கட்சியை விட்டு விலகுகிறீர்களா?" எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது ஸ்டைலில் சிரிப்போடு பதிலளித்துள்ளார்.

    Advertisement

    செய்தியாளர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதும் சிரித்துக்கொண்டே தனது இரு விரல்களையும் உயர்த்தி 'இரட்டை இலை' சின்னத்தைக் காட்டி, தான் என்றும் அதிமுகவிலேயே தொடர்வேன் என்பதை வார்த்தைகளின்றி உணர்த்தியுள்ளார்.

    Advertisement

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டும் என்று அதிமுக எம்.பி இன்பதுரை கூறியது பற்றி மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான சோலைராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுக எம்.பி இன்பதுரை கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இது அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. அவர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவுக்கு தாவப்போகிறாரா என்ற கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில், மதுரை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாநகராட்சி எதிர்கட்சி குழு தலைவர் சோலைராஜா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    Advertisement

    அப்போது பேசிய சோலைராஜா, "இரண்டு நாட்களுக்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அதிமுக எம்.பி இன்பதுரை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பதில் அளித்திருந்தேன். இதனால் நான் தவெகவில் சேர உள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆதரவாகப் பேசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு மாவட்ட செயலாளரிடம் உரிய விளக்கம் அளித்துள்ளேன்.

    இன்பதுரை ஆதவ் அர்ஜூனா குறித்து பேசியது தவறுதான். விளையாட்டுத்துறையில் உள்ளவர்கள் அமைச்சராக நீடிக்கலாம். ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்களும் விளையாட்டு துறையில் இருந்திருக்கிறார்கள். எனவே, இன்பதுரையின் கருத்து தவறான கருத்துதான். இருந்தபோதிலும் அவரை கண்டிப்பதாகக் கூறிய வாசகங்களை திரும்பப் பெறுகிறேன்" என்று தெரிவித்தார்.

    Advertisement

    அதைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அப்போது அவர், சோலைராஜாவின் விளக்கம் குறித்து பதிலளிப்பதற்காக மட்டும்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு எனக் கூறி மற்ற கேள்விகளைத் தவிர்த்தார்.

    இறுதியாக, நீங்களும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறதே என நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, தனது கைவிரல்களால் 'இரட்டை இலை' சின்னத்தை காட்டியபடி, எந்தவித பதிலும் அளிக்காமல் செல்லூர் ராஜு புறப்பட்டு சென்றார்.

    அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், "நீங்களும் கட்சியை விட்டு விலகுகிறீர்களா?" எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அந்த தகவல் எதுவும் உண்மையல்ல, தான் அதிமுகவிலேயே தொடர்வேன் என்பதை உணர்த்தும் விதமாக இரட்டை விரலைக் காட்டியுள்ளார்.

    English Summary

    Amidst the several key office-bearers switching TVK from AIADMK, former Minister Sellur Raju responded with a smile—in his style—when reporters asked, "Are you also leaving the party?"