ஏ*டா நீ எம்ஜிஆரா? ச*டாளன்களா.. அவ*க்கு எதுக்கு ஓட்டு போட்டீங்க! விஜயை ஒருமையில் பேசிய செல்லூர் ராஜு

  • மதுரை: 'கீ' கொடுத்தால் ஆடும் பாடும் முதலமைச்சராக உள்ளார். ஸ்கிரிப்ட் இருந்தால் தான் முதல்வர் பேசுகிறார். முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும்? ஸ்பாட்டில் அடித்து பேச வேண்டும் என கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ. மேலும், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும் ஆவேசமாகவும் பேசியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    சட்டமன்ற கூட்டத் தொடரில் இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிகட்டு என பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மு.வி. கருப்பையா பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Advertisement

    இதில் முன்னால் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். இதில் கருப்பையாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜல்லிகட்டு காளைகளுடன் முழக்கங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ,"ஜென்சி தலைமுறை முதல்வர் எப்போது வந்தாரோ? அப்போது இருந்தே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தவெக ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி. படையப்பா படத்தில் செந்தில் காமெடி சீன் போல சட்டை என்னது மாப்பிள்ளை அவரு என்பது போல இருக்கிறது. மக்கள் பாராட்டுவதை போல புதிய திட்டங்களை முதல்வர் செய்துள்ளரா? தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்த ஆட்சியாக அதிமுக ஆட்சி நடைபெற்றது.

    Advertisement

    தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்த ஆட்சியாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஏதோ ஜாக்பாட் அடித்தது போல தவெக ஆட்சி அமைத்துள்ளது. மெர்சல் படத்தில் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போல நடித்த ஜென்சி தலைமுறை முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சை கண்டித்திருக்க வேண்டாமா. அலங்காநல்லூர் மக்கள் தான் சொல்ல வேண்டும். (மெர்சல் என்பதற்கு பதிலாக மெர்சி என்றார்.)

    ரீல்ஸ் ஆட்சி வேண்டாம். ரியல் ஆட்சிக்கு வாங்கடா என்றால் தவெக வரமாட்டேன் என்கிறார்கள். கீ கொடுத்தால் ஆடும் பாடும் முதலமைச்சராக உள்ளார். ஸ்கிரிப்ட் இருந்தால் தான் முதல்வர் பேசுகிறார். முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும்? ஸ்பாட்டில் அடித்து பேச வேண்டும். சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கூட ஓரளவு சமாளித்து விடுவார். ஆனால் இவர் எல்லாவற்றிற்குமே அமைதியாக இருக்கிறார். முதலில் அமைச்சர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கடா ச*டாள பசங்களா?

    Advertisement

    வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்றத்தில் அமைச்சருக்கு தமிழை வாசிக்க தெரியவில்லை . ஓட்டே கேட்காமல் இவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டீர்களாடா ச*டாள*களா.. இதுவரை இவ* என்ன செஞ்சா* படத்தில் அப்படி என்ன கருத்து சொன்னா*. தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு எத்தனை குரல் கொடுத்திருக்கிறாய் நீ. ஏண்டா எம்ஜிஆர் மாதிரி நீ ஆயிர முடியுமா? ஒரு எம்ஜிஆர் தான் டா. நீ என் தலைவன் ஆகிற முடியுமா" என ஒருமையிலும் ஆவேசமாகவும் பேசினார் செல்லூர் ராஜூ.

    English Summary

    AIADMK leader Sellur Raju criticized Vijay’s leadership, calling his government scripted and accusing him of failing to respond strongly to Assembly issues.