விஜய் செயல்பாடு நல்லா இல்லைங்கய்யா.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே! சட்டென பேசிய சாலமன் பாப்பையா!


  • மதுரை: முதல்வர் விஜய் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை; காலம் போகட்டும் பார்ப்போம் எனவும், மும்மொழிக் கொள்கையை நான் ஏற்க மாட்டேன்.. எதிர்காலத்தில் வேறு ஒரு மொழியை திணிப்பதற்கான வழியாக அமையக்கூடும் என பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.

    Advertisement

    மதுரை தனக்கன்குளம் பகுதியில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் இல்லத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, நூலகத்தை திறந்து வைத்தார்.

    Advertisement

    தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள், புத்தாடைகள், மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சாலமன் பாப்பையா

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா," வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நூலகங்கள் மற்றும் புத்தகங்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகின்றன. தங்களுக்கு விருப்பமான துறையில் மாணவர்கள் புத்தகங்களைப் படித்து முன்னேறுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

    கரூர் கோவில் நிலம்.. ரூ.25000 கோடி மதிப்பு! அப்படியே மக்களுக்கு..சிஎம் விஜய்க்கு நன்றி சொன்ன ஜோதிமணி
    Advertisement

    இளைஞர்கள்

    இன்றைய இளைஞர்களுக்கு அறிவுத் திறன் அதிகரித்துள்ளது. அவர்களது படைப்பாற்றல் சிறப்பாக இருக்கிறது. ஆனால், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சமூக இயக்கங்களில் அவர்கள் சரியாக இருக்கிறார்களா என்ன தெரியவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை நான் ஏற்க மாட்டேன்.

    இது நியாயமா அப்பா? ராமதாஸிடம் புலம்பிய ஸ்ரீகாந்தி! அன்புமணி தான் எல்லாம்.. ஒரே வரியில் முடித்த அய்யா

    முதல்வர் விஜய்

    இரண்டு மொழிகள் போதுமானவை என்றும், தேவையான நேரத்தில் மற்றொரு மொழியை கற்றுக்கொள்ளலாம். மும்மொழி தேவையில்லை. மேலும், மும்மொழிக் கொள்கை எதிர்காலத்தில் வேறு ஒரு மொழியை திணிப்பதற்கான வழியாக அமையக்கூடும். தற்போதைய முதலமைச்சர் செயல்பாடு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு காலம் போகட்டும் பார்ப்போம். இதுவரை நல்லா இல்லை. இதற்குப் பின்பு நல்லா இருக்கலாம்.

    Advertisement

    நாட்டுப்பற்று

    குடும்பங்களில் பணத்தை அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நிலை உருவாகி, பாசமும் உறவுகளும் குறைந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். நாட்டுப்பற்று வளர வேண்டும். எந்தக் கட்சியில் இருந்தாலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும். மேலும், சமுதாயத்தில் பணத்தின் ஆதிக்கமும், அனைத்து நிலைகளிலும் லஞ்சம் அதிகரித்திருப்பதும் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு மதிப்புகள் குறைவதற்கு காரணமாக இருக்கிறது" என்றார்.

    English Summary

    Professor Solomon Pappaiah shared his views on CM Vijay's governance, the three-language policy, and the importance of reading.