மதுரையில் மாற்றி யோசித்த மாணவர்கள்.. கரும்பு மிஷினில் மாட்டியவருக்கு அதிர்ஷ்டம்

  • மதுரை: மதுரை தல்லாகுளத்தில் கரும்புச்சாறு எந்திரத்திற்குள் சிக்கிய சட்டை, வியாபாரியின் சட்டையைக் கிழித்து கல்லூரி மாணவர்கள் சமயோசிதமாக காப்பாற்றி உள்ளார்கள். இதனால் கன நிமிடத்தில் காயம் இன்றி வியாபாரி உயிர் தப்பியுள்ளார்.

    Advertisement

    நாம் எப்போதும் ஆபத்தான சூழ்நிலையில் பதற்றம் அடைவோம். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போவோம். அத்துடன் தவறான முடிவு எடுப்போம். இன்னும் அந்த சில வினாடிகளில் சிறிய அளவில் செய்யும் யோசனைகூட நாம் தப்பிக்க வாய்ப்பாக அமையும். அப்படித்தான் மதுரையில் வியாபாரி ஒருவர் கரும்பு மிஷினில் இருந்து தப்பி உள்ளார். மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பேருந்து நிறுத்தம் அருகே கரும்புச்சாறு கடை ஒருவர் நடத்தி வருகிறார்.

    Advertisement

    வழக்கம் போல் மோட்டார் மூலம் இயங்கக்கூடிய கரும்புச் சார் இயந்திரத்தில் கரும்பை மாட்டி கரும்புச்சாரை தயாரித்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரது சட்டையானது திடீரென கரும்பு சாறு எந்திரத்திற்குள் திடீரென மாட்டிக் கொண்டது. பதற்றத்தில் செய்வதறியாது திகைத்தார். உடனடியாக அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள் மோட்டார் மூலம் இயங்கக்கூடிய அந்த கரும்புச்சாறு இயந்திரத்தை உடனடியாக நிறுத்தி அவர் சட்டையை எடுப்பதற்கு முயற்சித்தனர். ஆனால் சட்டை எடுக்க முடியாத காரணத்தால், சட்டையை கிழித்து எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக எந்தவிதமான காயமும் அவருக்கு ஏற்படவில்லை. மேலும் எதிரே உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் துரித செயல்பாட்டினால் மிகப்பெரிய காயத்திலிருந்து கரும்புச் சாரு வியாபாரி காயம் இன்றி தப்பினார். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    English Summary

    In Tallakulam, Madurai, a vendor's shirt got caught inside a sugarcane juice machine. College students acted smartly and saved him by tearing his shirt, allowing the vendor to escape without any injuries in the nick of time.