மதுரை: தென் மாவட்ட அரசியல் என்றாலே எப்போதுமே அனல் பறக்கும். ஆனால், அங்குள்ள ஒரு குறிப்பிட்ட தொகுதியில் தற்போது நடக்கும் விவகாரங்கள் ஆளும் தவெக தரப்பு வட்டாரங்களையே முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன.
அந்தத் தொகுதியின் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கணவர் அடிக்கும் லூட்டிகளும், நடத்தும் வசூல் வேட்டைகளும் அப்பகுதி வணிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. பல பேரிடம் கட்சி பணிகள் , ஆட்சி பணிகள் என்று பல கோடிகளை இவர் ஏமாற்றி வருகிறாராம்.
தொகுதிக்குள் இயங்கி வரும் டாஸ்மாக் பார்கள், கல்குவாரிகள், மணல் ஒப்பந்தங்கள் மற்றும் பெரிய அளவிலான வணிக நிறுவனங்களுக்கு எம்எல்ஏவின் கணவர் தரப்பிலிருந்து நேரடியாகவே தூது அனுப்பப்பட்டு வருகிறது. தொகுதியில் தொழில் செய்ய வேண்டும் என்றால் மேடத்தை மாசம் ஒருமுறை தவறாமல் வந்து பார்த்துவிட வேண்டும்; சரியாகக் கவனித்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் வராது என்ற ஒற்றை நிபந்தனையோடு மாதாந்திர வசூல் வேட்டை தீவிரமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்துவிட்டுப் புலம்பித் தவித்து வருகின்றனர். தொழில் அதிபர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதனைத் தட்டிக் கேட்க முடியாமல், அதிகார பலத்திற்குப் பயந்து ரகசியமாகப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் புலம்பித் தவித்து வருகின்றனர். முறையான வரி செலுத்தி தொழில் செய்வோரையும் கூட, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் நெருக்கடி கொடுப்பதாக மிரட்டி இந்த கட்டாய மாமூல் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. இது ஒருபுறமிருக்க, கட்சியில் புதிதாக இணையும் நபர்களைக் குறிவைத்து அடுத்தகட்ட ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார் அந்த 'பவர்ஃபுல்' கணவர். கட்சியின் பொதுச்செயலாளரிடம் எனக்கு நேரடித் தொடர்பு உண்டு.. நான் நினைத்தால் மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் முக்கியப் பொறுப்புகளை வாங்கித் தர முடியும் என்று ஆசை வார்த்தை கூறி, புதிய நிர்வாகிகளிடம் லட்சக்கணக்கில் பேரம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனி அலுவலகம் போல ஒரு இடத்தை அமைத்து, அங்கு வருபவர்களிடம் கட்சிப் பதவிக்கான தொகையை வெளிப்படையாகவே நிர்ணயம் செய்வதாகவும் தகவல்கள் கசிகின்றன. பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்து, கொடியேற்றி, சிறை சென்ற பழைய நிர்வாகிகளும் உண்மையான தொண்டர்களும் இந்த அத்துமீறல்களால் நிலைகுலைந்து போயுள்ளனர். "நாங்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கத்தில், நேற்று வந்தவர்களுக்கெல்லாம் பணம் வாங்கிக்கொண்டு பதவி பெற்றுத் தருவதாக எம்.எல்.ஏ-வின் கணவர் பேரம் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று கட்சி நிர்வாகிகள் குமுறுகின்றனர். தொகுதி மக்களுக்கான பணிகளைச் செய்ய வேண்டிய எம்.எல்.ஏ-வை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் கணவரின் செயல்பாடுகள் குறித்து தலைமைக்கு விரிவான ரகசியப் புகார்களை உடன்பிறப்புகள் அனுப்பி வருகின்றனர். தலைமையின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றுள்ள நிலையில், அந்த பி எம்.எல்.ஏ தரப்பிற்கு விரைவில் கடுமையான எச்சரிக்கை அல்லது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா என்பதே தென் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.டாஸ்மாக் பார்கள் முதல் குவாரிகள் வரை கவனிப்பு உத்தரவு!
கட்சிப் பதவிகளை வைத்து கல்லாகட்டும் கணவர்?
கொதிக்கும் உண்மையான உடன்பிறப்புகள்!
விரைவில் கடுமையான எச்சரிக்கை