அரசு ஊழியர் போல் விடுமுறை எடுக்கிறார் விஜய்.. எப்படி சட்டம் ஒழுங்கை காக்க முடியும்.. சாடிய எடப்பாடி!

  • மதுரை: மாலை 6 மணிக்கு வீட்டுக்கு சென்றுவிட்டு காலை 9 மணிக்கு அதிகாரிகளை சந்தித்தால், விஜய்யால் எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரசு ஊழியர்களை போல் சனி மற்று ஞாயிறு கிழமைகளில் விஜய்யும் விடுமுறை எடுத்து கொள்வதாகவும் சாடியுள்ளார்.

    Advertisement

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக மதுரை வந்துள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    Advertisement

    இதன்பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக ஆட்சி அமைத்து 6 மாதம் நிறைவடைந்துவிட்டது. இந்த 6 மாதத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. மின் வெட்டை சரி செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 1 யூனிட் மின்சாரம் ரூ.5.40க்கு வாங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 1 யூனிட் மின்சாரம் ரூ.11 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    தனுஷ் பாலிடிக்ஸ் எண்ட்ரி.. ஏற்பாடு செய்த பாஜக! எடப்பாடி கண்டோலில் இல்லாத அதிமுக - மாணிக்கம் தாகூர்

    தற்போது விஜய் ஆட்சியில் மின்துறை அமைச்சராகவும், சிறைத்துறை அமைச்சராகவும் வீரவசனம் பேசும் சிடிஆர் நிர்மல்குமார் பொறுப்பேற்றார். அப்போது தான் மிகப்பெரிய குளறுபடிகள் நடக்கிறது. ஆட்சிக்கு வந்த பின் ரூ.20க்கு கொள்முதல் செய்யப்பட்ட மின்சார டெண்டரை ரத்து செய்தார். தொடர்ந்து திட்டமிட்டு மின் பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கி 1 யூனிட் மின்சாரத்தை ரூ.37.50க்கு வாங்குகிறார்கள்.

    Advertisement

    இதன் மூலமாக தவெக ஆட்சியில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கு எதிர்காலத்தில் விஜய்யும், சிடிஆர் நிர்மல்குமாரும் பதில் சொல்லி ஆக வேண்டும். அதேபோல் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஏற்கனவே குற்றம் செய்த குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் புழல் சிறையில் விஜய் ஆய்வு செய்தார்.

    அதன்பின் புழல் சிறையில் இருந்து 2 பேர் தப்பி ஓடினார்கள். இவர் ஆய்வு செய்தாரா அல்லது ஜோசியர் சொன்னதால் புழல் சிறைக்கு சென்று வந்தாரா? தேனி சிறையில் இருந்து 17 பேர் தப்பியோடி இருக்கிறார்கள். திறமையற்ற அரசின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியில் சிறுமிகள் அடிக்கடி மாயமாகி வருகிறார்கள். செஞ்சி சிறுமியை 18 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    Advertisement
    இதுக்கு எடப்பாடி பழனிசாமி திமுகவில் சேர்ந்துடலாம்.. அதிமுகவை காப்பாத்துங்க.. நிர்மல்குமார் விமர்சனம்

    மக்கள் நடமாடும் இடங்களில் கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. வீடு புகுந்து கொலை செய்கிறார்கள். அரசு ஊழியர் போல் தலைமைச் செயலகத்திற்கு விஜய் செல்கிறார். பின்னர் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுகிறார். சனி, ஞாயிறு விடுப்பு எடுத்து கொள்கிறார். அரசு ஊழியர் போல் விஜய் இருக்கிறார். மாலை 6 மணிக்கு வீட்டிற்கு சென்றுவிட்டால், காலை 9 மணிக்கு தான் மீண்டும் அதிகாரிகளை சந்திக்கிறார்.

    இப்படி இருந்தால் எப்படி தமிழ்நாட்டை பாதுகாக்க முடியும். தவெக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நாகையில் 137 கிலோ மெத் ரூ.400 கோடி மதிப்பில் கண்டறியப்பட்டுள்ளது. தவெகவைச் சேர்ந்த பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விஜய் வாயே திறப்பதில்லை. எந்த பிரச்சனைக்கும் பதில் சொல்லாமல் இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

    English Summary

    Taking Weekends Off Like Government Employees: Edappadi Palaniswami Takes a Dig at CM Vijay Work