மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! முட்டி போட்டபடியே குழந்தை கையில் மோதிரம் அணிவித்தார் விஜய்

  • மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்றைய தினம் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். தாயை நாற்காலியில் உட்கார வைத்து குழந்தையின் விரலில் முட்டி போட்டபடியே முதல்வர் விஜய் மோதிரம் அணிவித்து குழந்தையை கொஞ்சினார். பின்னர் குழந்தைக்கு ஹைஃபை கொடுத்தார்.

    Advertisement

    அங்கு விழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. விஜய் பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்தார். அவருடன் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், அருண்ராஜ், பெ.விஸ்வநாதன், மதுரை எம்பி சு.வெங்கடேசன், விருதுநகர் எம்பியும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Advertisement

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த விழா தொடங்கியது. முதல் இரு குழந்தைகள் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். அந்த தாய்மார்களை நாற்காலியில் அமர வைத்து முட்டி போட்டபடியே மோதிரம் அணிவித்தார் விஜய். பிறகு மேடையில் இருந்து இறங்கி மீதியிருந்த பயனாளிகளுக்கும் தங்க மோதிரத்தை வழங்கினார். அப்போது தாய்மார்களின் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகளை தூக்கி கொஞ்சினார். மேலும் குழந்தைகளுக்கு பெயர்களையும் 3 முறை காதில் சொன்னார் விஜய்.

    இதையடுத்து இந்த திட்டத்தில் பயனாளிகளுடன் முதல்வர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததுமே மாநிலம் முழுவதும் 107 மையங்களில் இந்த திட்டத்தை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர். ்அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 1,28,499 குழந்தைகளுக்கு இன்று தமிழகம் முழுவதும் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் "தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டிருந்தது.

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்தது. இதையடுத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதற்கான டெண்டர் விடப்பட்டது. அதில் ஜீரோ வேஸ்டேஜ் கோட் செய்த ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடைக்கு இந்த டெண்டர் கொடுக்கப்பட்டது.

    இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய அரசு முடிவெடுத்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 4.11 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க முடிவு செய்யப்பட்டு, நடப்பாண்டில் பட்ஜெட்டில் 560 கோடி ரூபாயை தவெக அரசு ஒதுக்கியது.

    Advertisement

    தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை இன்றைய தினம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை புறப்பட்டு மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு பின்னர் அங்கிருந்து 44 கி.மீ. தூரம் பயணித்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு காரில் செல்கிறார்.

    தங்க மோதிரம் பெற உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் இந்த திட்டம் காலை 12 மணிக்கு தொடங்கி வைக்கப்பட்டது. ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்த மோதிரம் வழங்கப்படுகிறது.

    Advertisement

    இதையடுத்து மதுராந்தகம், தாராபுரம் தவிர மாநிலம் முழுவதும் 107 மையங்களில் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள். அது போல் மதுரையிலும் 10 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்.

    இந்தச நிகழ்ச்சிக்கு பிறகு அரசு சுற்றுலா மாளிகைக்கு முதல்வர் செல்கிறார். அங்கு மதிய உணவு, சிறிய ஓய்வு பிறகு மாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார். தரிசனங்களை முடித்துக் கொண்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    Advertisement

    முதல்வர் விஜய் வருகையால் மதுரையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணன் சீர் என்ற பெயரில் தங்கத் தாலி, பட்டு சேலை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே எழுந்துள்ளது.

    English Summary

    Thaimaaman Thanga Mothiram thittam will be inaugurated by CM Vijay today at 11 am in Madurai Rajaji Government hospital.