ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பகீர் கொலைகள்.. மதுரையில் அரங்கேறிய கொடூரம்.. என்ன நடக்குது?

  • மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் 3 கொலை சம்பவங்கள் நடந்திருக்கும் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே சரவணன் என்பவரை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பேசுகையில், தவெக ஆட்சியில் ரெண்டு ரெண்டுக்கு இடையில தான் போட்டியே.. ஒன்று மின்வெட்டு.. மற்றொன்று அரிவாள் வெட்டு என்று பேசி இருந்தார். தவெக ஆட்சியில் தொடர் மின் வெட்டு காரணமாக மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    Advertisement

    கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று ஒருநாளில் மட்டும் மதுரையில் 3 கொலை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது மதுரை மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. மதுரை அருகே உள்ள பெருங்குடி பகுதியில் கணவின்றி தனித்து வசித்து வந்த பெண் அவரின் உறவினர்களால் தலையில் கல்லால் அடித்துது கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மேலூர் அருகே இளைஞர் செல்லத்துரை தலையில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டார். அதேபோல் தெற்கு வாசல் அருகே சப்பாணி கோயில் தெருவை சேர்ந்த ரவுடி சப்பாணி சரவணன் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே நடந்திருக்கிறது.

    Advertisement

    அடுத்தடுத்து ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள் நடந்திருப்பது சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பி இருக்கிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். காவல்துறை மானியக் கோரிக்கையின் போது கூட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Three Brutal Murders in 24 Hours Shock Madurai; Gang Chases and Kills Man Near Police Station