திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்

  • சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவித்துள்ளது.

    Advertisement

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி மதுரை எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் தான். கார்த்திகை நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.

    Advertisement

    இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் மேல் முறையீடு செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? இது ஜனநாயக நாடு. மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என்று கேள்வி எழுப்பியதோடு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் தமிழக அரசின் முடிவு என்ன? என்பதை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tirupparankundram Deepam Case: The Tamil Nadu government informed the Madras High Court that it has appealed to the Supreme Court against the verdict permitting Karthigai Deepam atop Tirupparankundram hill. The court stressed communal harmony and adjourned the case to July 27.