சட்டம் ஒழுங்கு விவகாரம்.. ஆர்டிஐ விலக்கு ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த புது விளக்கம்

  • சென்னை: சட்டம்-ஒழுங்கு தொடர்பான சில முக்கிய விவரங்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம் என கூறிவிட்டு, தகவல்களை மறைக்க தவெக அரசு முற்படுவது ஏன்? என விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், சட்ட அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் சில முக்கியமான தகவல்களை ஆர்டிஐயில் வழங்க முடியாது என அரசாணை வெளியிடப்பட்டு இருப்பது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிர்மல் குமார் கூறியதாவது:-

    Advertisement

    எல்லாவற்றிற்கும் இல்லை. சாதி மோதல் தொடர்பாக மாவட்ட அளவில் நடைபெறும் விசாரணை உள்ளிட்டவை தொடர்பாக ஆர்டிஐ கேட்கிறார்கள். 20 பிரிவுகள் உள்ளன. 20-ல் ஒரு சில தகவல்கள் மட்டுமே வாங்க முடியாது. சாதி மோதல் விவகாரம் உள்ளிட்டவை மட்டும்தான் வாங்க முடியது. ஏனெனில் இது மேலும் சர்ச்சையாக்கும்.

    ஏதாவது ஒரு இடத்தில் பொதுமக்களுக்கு சங்கடம் ஏற்படும் வகையில் இருந்தால் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வோம். ஒரு சில விஷயத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் எண்ண இருக்கிறது.. பொதுமக்களுக்கு ஏதேனும் சங்கடம் இருந்தால் முதல்வரிடம் எடுத்து செல்வோம். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள். லஞ்சம் கேட்டால் எங்களிடம் தெரியப்படுத்துங்கள்.

    Advertisement

    அது லஞ்சம் இல்லாமல் 100 சதவீதம் செய்ய வேண்டிய பொறுப்பு அரசின் பொறுப்பு. பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று முதல்வர் முதலிலேயே சொல்லிவிட்டார். அடுத்த நிமிடம் 100 சதவீதம் நடவடிக்கை எடுப்போம். தவறு இருந்தால் எல்லா தரப்பிலும் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

    English Summary

    Nirmal Kumar: Tamil Nadu government has issued a Government Order stating that certain key details regarding law and order will no longer be disclosed under the Right to Information (RTI) Act. Amidst criticism questioning why the government—which had pledged to function with transparency—is attempting to withhold information, Law Minister C.T.R. Nirmal Kumar has offered an explanation regarding the matter.