'அன்பு அக்கா திரிஷாவை பற்றி'.. மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எச்சரிக்கை

  • மதுரை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை திரிஷா குறித்தும் முதலமைச்சர் விஜய் குறித்தும் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கூறப்படும் விவகாரம் மற்றும் அதனை தொடர்ந்து அவர் கைதான விவகாரம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் அன்பு அக்கா திரிஷாவை பற்றி யார் தவறாக பேசினால் ஏற்க முடியாது. மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும் - மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டிக்க தவறியதாக கூறி, தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 3) தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், காவிரியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை என்றும், முதல்வர் விஜய் திமுக மீது பொய் வழக்கு போடுவதிலேயே கவனமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அப்போது தொண்டர்கள் சிலர் த்ரிஷா, த்ரிஷா என்று பெயரைக்கூறி சத்தம் போட்ர்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின் தண்ணீரை குறிப்பிட்டு அளித்த விளக்கம் இரட்டை அர்த்தத்தில் உள்ளதாக புகார் எழுந்தது.

    Advertisement

    இதையடுத்து பொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தும் வகையிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தும் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்த புகாரின் பேரில் உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேல் வேனில் வைத்து அழைத்து தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த பிரச்னை தொடர்பாக தவெகவினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினர் உதயநிதி ஸ்டாலினின் கைதை கண்டித்து கடுமையாக எதிர்வினையாற்றினார்கள். நேற்று பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Advertisement

    இந்த சூழலில் அன்பு அக்கா திரிஷாவை பற்றி யார் தவறாக பேசினால் ஏற்க முடியாது. மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும் - மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெண்கள் நம் நாட்டின் கண்கள் Vs அநீதி வீழும் அறம் வெல்லும் என திமுக Vs திரிஷா நற்பணி மன்றத்தினர் மதுரையில் மாறி மாறி போஸ்டர் ஓட்டியுள்ளனர்

    மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றம் (தலைமையகம்) சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கடும் கண்டனம் எனவும்
    பெண்களின் பெயரை பயன்படுத்தி நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்தத்தில் பேசி அவமதித்தால் ஏற்க முடியாது. எங்கள் அன்பு அக்கா திரிஷா அவர்களைப்பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும் பெண்கள் நம் நாட்டின் கண்கள் என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.

    Advertisement

    இதற்கு பதிலளிக்கும் விதத்தில் மதுரை மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினின் கைதை கண்டித்து அநீதி விழும் அறம் வெல்லும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மதுரையில் திமுக மற்றும் திரிஷா நற்பணி மன்றத்தினர் இடையே போஸ்டர் போட்டி தொடங்கும் வகையில் மாநகர் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    English Summary

    "Women are the eyes of our nation" vs. "Injustice will fall, righteousness will prevail, Trisha Welfare Association members in Madurai issue a warning to Udhayanidhi Stalin