ஸ்டாலினும் உதயநிதியும்.. பாஜகவுக்கு மிகப் பெரிய கொத்தடிமை! 5 வருடம் பேசாதது ஏன்? சிடிஆர் கேள்வி

  • மதுரை: பாஜகவுக்கு மிகப் பெரிய கொத்தடிமையக ஐந்து வருடம் இருந்தது தான் திமுகவின் ஸ்டாலினும் உதயநிதியும் தான் எனவும், திமுக 5 வருடமாக ஆட்சியில் இருந்த போது கருப்பு பலுன் விட்டார்கள்.. ஆனால், என்றாவது ஒரு நாளாவது பாஜகவை எதிர்த்து, மோடியை எதிர்த்து பேசி இருக்கிறார்களா? என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    மதுரை கல்லூரியில் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் நிர்மல் குமார் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார்.

    Advertisement

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," திமுக 5 வருடமாக ஆட்சியில் இருந்தார்கள். கருப்பு பலுன் விட்டார்கள். திமுக ஆட்சியில் இருந்தபோது ஒரு நாளாவது பாஜகவை எதிர்த்து, மோடியை எதிர்த்து பேசி இருக்கிறார்களா?

    எஸ்ஐஆர்-ஐ திர்த்து தமிழக முழுவதும் போராடி ஒரே கட்சி தவக. போராட்டத்திற்கு எந்த தடையும் கிடையாது.
    காவல்துறை அனுமதி இல்லாமல் எங்கு போனாலும் முறையாக அனுமதி வாங்க வேண்டும். இல்லை என்றால் காவல்துறை தடுக்க தான் செய்வார்கள்.

    ஆபாசம்.. உருவகேலி! அப்பா ஸ்டாலினும்.. மகன் உதயநிதியும்! எக்ஸ்போஸ் ஆன திமுக.. சிடிஆர் விளாசல்!
    Advertisement

    எஸ்ஐஆர் மட்டும் நடக்காமல் இருந்தால் 170 தொகுதியில் தவெக வெற்றி பெற்றிருக்கும். நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதியும் அதிமுகவில் கோட்டையாக இருந்தது. எடப்பாடி எந்த நிலைமைக்கு கொண்டு போய்விட்டார் என்று பார்க்க முடிகிறது. அதிமுக வாக்காளர்கள் புரட்சித்தலைவர் வாக்காளர்கள் மொத்த மொத்தமாக தளபதி பின்னாடி இருக்கிறார்கள்.

    அதிமுக முன்றாவது இடத்துக்குப் போய்விட்டது. அதிமுக எடப்பாடி தலைமையை நீக்காமல் எந்த தேர்தலிலும் இரண்டு மூன்று இடத்தை தவிர வேறு எந்த இடத்திற்கு வர முடியாது. பாஜகவுக்கு மிகப் பெரிய கொத்தடிமையக ஐந்து வருடம் இருந்தது தான் திமுக ஸ்டாலினும் உதயநிதியும் தான். மதுரையில் ஐந்து வருடமாக கழிவுநீர் கால்வாய் திட்டம் இல்லாமல் இருந்தது தற்போது 2000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவாக எல்லா இடத்திலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறும்" என்றார்.

    English Summary

    Tamil Nadu minister Nirmal Kumar criticises Stalin and Udhayanidhi over their BJP stance, while claiming TVK led protests against SIR voter revision.