விஜய் அரசை கவிழ்க்க சதி! திமுக -அதிமுக சேர்ந்து டீலிங்க்! எம்எல்ஏக்களுக்கு 15 கோடி என்கிறார் முஸ்தபா

  • மதுரை: அதிமுக திமுக இணைந்து தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், தன்னை கூட தொடர்பு கொண்டு 15 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்களிக்க வேண்டும் என பேரம் பேசியதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏவான முஸ்தபா.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய்.

    Advertisement

    இந்த கூட்டணியில், காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு இரண்டு தலா இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதே நேரத்தில் பொதுவெளிகளிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் அறிக்கை வாயிலாகவும் விஜய் அரசை தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    முதல்வர் விஜய்

    குறிப்பாக பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் நேரடியாக போராட்டத்தில் குதித்திருப்பது விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டதும் விஜய் செல்வாக்கை சற்று சரிய வைத்துள்ளது. கூட்டணி கட்சிகளின் அருப்தியை விஜய் சம்பாதித்திருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    நம்பிக்கை இல்லா தீர்மானம்

    இந்த நிலையில் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நடந்து முடிந்து ஆறு மாதங்கள் கடந்து இருக்கிறது. தமிழக சட்டசபையில் மீண்டும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானமும்ம் கொண்டு வரப்படலாம் என சலசலப்புகள் எழுந்து வருகிறது. பொதுவாக சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அடுத்த ஆறு மாதங்களுக்கு மீண்டும் கொண்டுவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    திமுக, அதிமுக

    தற்போது விஜய்க்கு எதிராக கம்யூனிஸ்டுகள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்கின்றனர். திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகள் சேர்ந்து இம்முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர இருப்பதாக யூகங்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் தன்னிடம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க பேரம் பேசியதாக பகிர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் மதுரை மத்திய தொகுதி தமிழக வெற்றி கழக எம்எல்ஏவான முஸ்தபா.

    தவெக எம்எல்ஏ முஸ்தபா

    இது தொடர்பாக மதுரையில் பேசிய அவர்," தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறு மாத கால ஆட்சி தமிழ்நாடு மக்களுக்கு தமிழக முதலமைச்சர் பல நல்ல திட்டங்களை தந்துள்ளார். இந்த ஆட்சியை கெடுக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை நேரத்தில் ஈடுபடுகின்றனர். எனக்கும் போன் செய்து தொடர்பு கொண்டு 15 கோடி வாங்கிக் கொள்ளுங்கள். நம்பிக்கை இல்லா வாக்கு எடுப்பு கொண்டு வருவோம். அப்போது 15 கோடி வாங்கிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்.

    Advertisement

    குதிரை பேரம்

    அந்த விஷயத்தில் மீண்டும் இப்போது அண்ணா திமுகவினர் செயல்படுகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த அண்ணாதிமுகவினர் என்னை தொடர்பு கொள்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்திற்கு இழுக்க பார்க்கின்றனர். அதிமுக திமுக சேர்ந்துதான் சதி செய்கின்றனர். இது குறித்து தலைமை இடம் தெரிவித்திருக்கிறேன். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் யார் இதை செய்தார்கள் என வெளியே வரும்" என்றார்.

    English Summary

    Madurai Central TVK MLA Mustafa alleges he was offered ₹15 crore to vote against the Vijay government in a confidence motion.