என்னை தொடர்பு கொண்டு ரூ.15 கோடி ஆஃபர்.. தவெக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் குறி.. முஸ்தபா பகீர் புகார்

  • மதுரை: மீண்டும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேர்த்தில் ஈடுபடுவதாகவும், அதிமுக, திமுக சேர்ந்துதான் இந்த முயற்சியை செய்கின்றனர் என்றும் மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா தெரிவித்துள்ளார். குதிரை பேரம் தொடர்பாக தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும், ஒன்று இரண்டு நாட்களில் யார் இதை செய்தார்கள் என்பது வெளியே வரும் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த மத்திய தொகுதி எம்எல்ஏ முத்தப்பா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறு மாத கால ஆட்சியில் மக்களுக்கு முதலமைச்சர் பல நல்ல திட்டங்களை தந்துள்ளார். தமிழ்நாடு மகளிர்க்கான திட்டத்தை தொடங்கி வைத்து பல்வேறு மாவட்டங்களில் இன்று அந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    Advertisement

    சீமானின் இரட்டை வேடம்

    ஆர்பி உதயகுமார் நடித்தே பழகிவிட்டார். அவர்கள் ஆட்சியில் தான் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றது. அவரை முன்னிறுத்திக் கொள்வதற்காக வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கிறார். சீமான் இரட்டை வேடம் போடுவார். கெட்டுப்போன பிரியாணி கொடுத்தாலும் சாப்பிட தயாராக இருக்கிறார். பொது வேட்பாளராக நிற்க தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறார் அவரால் சட்டமன்ற உறுப்பினராக முடியவில்லை. டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். சீமான் தமிழக அரசியல் களத்தில் மக்கள் மன்றத்தில் தோல்வியை சந்தித்து வருகிறார்.

    புதிய தலைமை செயலகம் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அந்த திட்டம் பரிசீனையில் உள்ளது. ஜெயலலிதா தாலிக்கு தங்கம் திட்டம், இளம் பெண்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தார். அந்த அடிப்படையில் முதல்வர் தாய்மாமன் சீராக தங்கம் மோதிரம் போன்றவற்றை கொண்டு வந்துள்ளார். மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். அம்மா கொண்டு வந்த எவ்வளவு திட்டத்தை திமுகவினர் மூடினார்கள் என்று பார்த்தோம். மக்களுக்குத் தேவையான திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்த அதே பெயரில் இப்போது முதல்வர் கொண்டு வந்திருக்கிறார். இந்த ஆட்சியை கெடுக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

    Advertisement
    விஜய் அரசை கவிழ்க்க சதி! திமுக -அதிமுக சேர்ந்து டீலிங்க்! எம்எல்ஏக்களுக்கு 15 கோடி என்கிறார் முஸ்தபா

    100 கோடி கொடுத்தாலும்..

    மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேர்த்தில் ஈடுபடுகின்றனர். என்னைத் தொடர்பு கொண்டு 15 கோடி வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். இதனை தலைமைக்கு கொண்டு சென்று தெரிவித்திருக்கிறேன். இந்தப் பகுதியை சேர்ந்த அதிமுகவினர் என்னைத் தொடர்பு கொள்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்திற்கு ஈடுபடுத்துகிறார்கள். 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் வர மாட்டார்கள்.

    அதிமுக, திமுக சேர்ந்துதான் முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து தலைமையிடம் தெரிவித்திருக்கிறேன். ஒன்று இரண்டு நாட்களில் யார் இதை செய்தார்கள் என வெளியே வரும். ஏற்கனவே 35 கூட்டணியை வைத்து திமுக களத்தில் நின்றனர். அதிமுக பக்கம் யாரும் வரவில்லை. யாரிடமும் கூட்டணி இல்லாமல் மக்களுடன் கூட்டணி வைத்து தமிழக வெற்றி கழகம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 34 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்துள்ளோம்.

    Advertisement

    மக்கள் வரவேற்பும், எழுச்சியும் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம் அதிக வாக்கு விழுக்காடு பெற வாய்ப்புள்ளது என கூறினார்.

    English Summary

    TVK MLA Mustafa alleged that attempts were being made to lure party MLAs through horse-trading, claiming he was offered Rs 15 crore and accusing both the DMK and AIADMK of being involved.