மதுரையில் அவருக்கு மட்டும் பதவி கிடையாது.. கல்லாணை வைத்த வேட்டு.. தவெக எம்எல்ஏ கோபிசன் அதிருப்தி!

  • மதுரை: மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ கோபிசன் மற்றும் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணைக்கு இடையில் மோதல் வெடித்திருப்பது தெரிய வந்துளது. தவெகவில் மதுரைக்கு மட்டும் 8 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கல்லாணை வசம் மட்டும் 2 தொகுதிகள் இருக்கின்றன. இதற்கு கோபிசன் மீதான புகார்களே காரணம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    தவெகவில் நேற்றிரவு அதிமுகவில் இருந்து இணைந்தவர்களுக்கும், சிட்டிங் எம்எல்ஏ-க்கள் பலருக்கும் நேற்று பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது. அமைப்புச் செயலாளர்கள் பொறுப்புகள் உருவாக்கப்பட்டதோடு, துணை பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. அதேபோல் 27 பேருக்கு புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    Advertisement

    அதன்படி மதுரை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் வென்ற முஸ்தபா, மதுரை கிழக்கு தொகுதியில் வென்ற கார்த்திகேயன் மற்றும் சோழவந்தான் தொகுதியில் வென்ற கருப்பையா ஆகியோர் அந்தந்த தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

    இதனால் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ தங்கப்பாண்டி மற்றும் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை ஆகியோரின் அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் மத்திய மத்திய தொகுதி கட்டுப்பாட்டை தங்கப்பாண்டியும், மதுரை கிழக்கு தொகுதி கட்டுப்பாட்டை கல்லாணையும் வைத்திருந்தனர். இருப்பினும் கல்லாணை வசம் மட்டும் 2 தொகுதிகள் இருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மதுரை தெற்கு மற்றும் வடக்கு ஆகிய தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளராக கல்லாணை தொடர்ந்து வருகிறார். முஸ்தபா, கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுத்த தவெக தலைமை, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ கோபிசனுக்கு மட்டும் புதிதாக பொறுப்பை கொடுக்கவில்லை. இதற்கு காரணம் தவெக தலைமைக்கு கல்லாணை அளித்த புகார்கள் என்று சொல்லப்படுகிறது.

    மதுரை தெற்கு தொகுதியில் கோபிசன் முதலில் தவெகவின் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. ஜோ பீட்டர் என்பவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் கல்லாணையின் பரிந்துரை காரணமாகவே பின்னர் வேட்பாளர் மாற்றப்பட்டு கோபிசன் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் விஜய் மக்கள் இயக்கத்திலும் இருந்தவர் கிடையாது. செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்.

    Advertisement

    தவெக ஆட்சிக்கு வந்த பின் கோபிசனின் செயல்பாடுகளில் மாற்றங்கள் தென்பட தொடங்கின. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தன்னுடைய தலைமையில் நடக்க வேண்டும் என்று கோபிசன் பிடிவாதம் காட்டுவதாக தவெகவினர் பேசத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மாவட்டச் செயலாளரான கல்லாணையுடன் மோதல் போக்கை தொடங்கியதாக தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் தாம் இல்லையென்றால் மதுரை தெற்கு தொகுதியில் தவெக வென்றிருக்காது என்று கோபிசன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேச தொடங்கினார். இதுகுறித்து கல்லாணைக்கு தெரிய வர, நேரடியாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் புகாரை கூறி இருக்கிறார். இதன் காரணமாகவே கோபிசனுக்கு மட்டும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    English Summary

    TVK: Rift Brews Between TVK MLAs Gopison and Kallaanai Over Party Post Distribution in Madurai