தமிழகத்தில் சாதிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்! மத்திய அமைச்சர்

  • மதுரை: தமிழ்நாட்டில் சாதி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நிலமற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், சமூக நீதியைப் பொறுத்தவரை தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

    Advertisement

    பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாட்டின் கொள்கை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

    முத்துராமலிங்கத் தேவர், பெரியார் ஈ.வெ.ராமசாமி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த அவர், சமூக சீர்திருத்தம் மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டங்களில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார்.

    பிரதமர் மோடி பசும்பொன்னிற்கு வந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார்.. துணை ஜனாதிபதி தகவல்

    முத்துராமலிங்கத் தேவர் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகப் பாடுபட்டவர் என்றும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து செயல்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருப்பதாகக் கூறிய அவர், இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் பொதுவாக 50 சதவீத உச்சவரம்பை நிர்ணயித்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

    பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்த அவர், அனைத்து சமூகங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் உள்ளதாகவும், அவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    தனது அமைச்சகம் பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் நாடோடி சமூகத்தினர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

    Advertisement
    விஜய் ஏன் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தவில்லை தெரியுமா?

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜன்தன் திட்டம், முத்ரா திட்டம், உஜ்வாலா திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருவதாகவும், தமிழ்நாட்டிலும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், அதன் காரணமாக மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் பாதிக்கப்படக் கூடாது என்றார்.

    Advertisement

    நிலமற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராம்தாஸ் அத்வாலே கோரிக்கை விடுத்தார். இதன் மூலம் கிராமப்புற மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும், விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

    அதெல்லாம் வதந்தி..பசும்பொன்னுக்கு சிஎம் விஜய் வர மாட்டார்! யூகங்களுக்கு டாட் வைத்த அமைச்சர் சிடிஆர்!

    தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் சாதிய மோதல்கள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து கவலை தெரிவித்த ராம்தாஸ் அத்வாலே, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    Advertisement

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியை ஆதரித்தார்.

    இடம் மாறிச் சென்றவர்கள், கண்டறிய முடியாதவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றவர்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    ஒருவர் இரண்டு இடங்களில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கக் கூடாது என்றும், வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து தேர்தல் ஆணையம் உரிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறினார்.