விஜய் ஆட்சி 3, 6 மாதம்தானா?.. உங்கள் எண்ணம் நடக்காது.. 5 ஆண்டுகளும் விஜய்தான் முதல்வர்.. வைகோ உறுதி

  • மதுரை: விஜய் ஆட்சி இன்னும் 3 மாதங்கள்தான் இருக்கும், 6 மாதங்கள்தான் இருக்கும் என சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், அவர்களின் எண்ணமெல்லாம் ஒருபோதும் நடக்காது. விஜய் தலைமையிலான தவெக அரசு முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யும். அடுத்த முறையும் விஜய்தான் ஆட்சிக்கு வருவார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த வைகோ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: தேனி சிறைச் சாலையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு காவலர்களைத் தாக்கிவிட்டு 17 நபர்கள் தப்பிச் சென்ற செய்தி பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடுவதற்கு முன்பே தமிழக வெற்றிக் கழக அரசு குறித்து பொய் பிரச்சாரங்களை பரப்பிவிட்ட நிலையில் 10 மணி நேரத்திற்குள்ளாகவே முதல் 10 நபர்களை காவல்துறையினர் கைது செய்து, அடுத்த நாளில் மிகத் துரிதமாக மீத நபர்களையும் கைது செய்த காவல் துறையை நான் பாராட்டுகிறேன்.

    Advertisement

    எல்லா ஆட்சிக் காலத்திலும்..

    காவல் துறை கடமை தவறிவிட்டதாகவும், நாள்தோறும் கொலைகளும், கற்பழிப்புகளும், சித்திரவதைகளும், பாலியல் குற்றங்களும் காவல் நிலையத்தில் கொடுமைகளும் நடப்பதாக சில தலைவர்கள் நாள் தவறாமல் அறிக்கை விடுகிறார்கள். ஆனால், மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பிறகும் கலைஞர் ஆட்சிக் காலத்திலும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்திலும், ஸ்டாலின் ஆட்சியிலும் இதேபோல நான் தவறாமல் கொலைகள், கற்பழிப்புகள், காவல் நிலைய சித்திரவதைகள், காவல் நிலையம் மரணங்கள், பாலியல் கொடுமைகள் எண்ணற்றவைகள் நடந்திருக்கின்றன.

    உங்க எண்ணம் நடக்காது

    கடந்த ஒரு வார காலமாக அனைத்தையும் நான் சேகரித்து வருகிறேன். விரைவில் ஊடகத் துறையினரை அழைத்து அத்தனையும் அவர்களிடத்தில் ஒரு நிகழ்ச்சியாக நடத்தி தெரிவிக்க விரும்புகிறேன். நாசகார ஸ்டெர்லைட் ஆட்சியில் மகராஷ்டிராவில் விரட்டப்பட்டு ஒரு வாரத்தில் ஜெயலலிதா ஆட்சியில் லைசன்ஸ் வாங்கப்பட்டது. திமுக ஆட்சி காலத்தை தொடர்ந்து அதிமுக காலகட்டத்தில் எடப்பாடி அரசு காவலர்களை ஏவி விட்டு துப்பாக்கி சூடு நடத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை கொடூரமாக கொலை செய்தார்கள்.

    Advertisement

    இப்பொழுது எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் இந்த ஆட்சி இப்படி அப்படி என்று பழி போடுகிறார்கள். அதிலும் சில பேர் மூன்று மாதங்கள் இந்த ஆட்சி இருக்கும், ஆறு மாதங்கள் இருக்கும் என்று கூறி வருகிறார்கள். உங்களுடைய எண்ணமெல்லாம் நடக்காது. SIR காரணமாகத்தான் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கவில்லை. அது இல்லாம இருந்திருந்தால் விஜய்க்கு கூடுதலாக 30 இடங்கள் கிடைத்திருக்கும்.

    இளைஞர்கள் விழிப்புணர்வு

    தமிழகம் முழுவதும் SIR-ஐ திருத்தம் செய்தவர்கள் திமுகவினர் தான். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர்கள் அதை எதிர்த்து விமர்சனம் செய்தும் போராட்டம் செய்து வருகிறார்கள். கரப்பான் பூச்சி ஜனதா தளம் மட்டுமல்ல கட்சிக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் கூட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் கட்சிகளை சாராத இளைஞர்கள் அந்தந்த நாடுகளில் சின்ன சின்ன காரணங்களுக்காக பெரிய அளவில் களம் இறங்கி போராடி வருகிறார்கள்.

    Advertisement

    இந்தியாவில் இளைய தலைமுறைகள் விழிப்புணர்வோடு ஜனநாயகத்தை பார்க்க எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வர் பசும்பொன் வராதது குறித்த கேள்விக்கு, எல்லா காலத்திலும் எல்லோரும் வந்தார்களா. முக்குலத்தோர் ஓட்டு வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வந்து கொண்டிருக்க கூடிய நிலையில் நான் தான் நேரடியாக முழுமையாக 50 முறை சென்று வந்தேன்.

    அன்பில் மகேஷ் நல்ல நண்பர்

    நெருக்கடி வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அவர் வரவில்லை. தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் செல்கிறார்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு உரிய மரியாதையை முதல்வர் நிச்சயம் தருவார். அன்பில் மகேஷ் கைது குறித்த கேள்விக்கு, அன்பில் எனக்கு நல்ல நண்பர் என் மீது உயிரானவர். அவர் கைது என்பது சங்கடமாகத்தான் உள்ளது. ஆனால், அதை கண்டிக்கத்தக்கது என்பது என்னிடம் ஆதாரம் இல்லை. வழக்கு என்னவென்று நீதிமன்றம் தான் கூற வேண்டும்.

    Advertisement

    SIR பற்றி பேசியபோது திமுக கூட்டணியில் இருந்த போது விமர்சனம் செய்யாத நீங்கள் தற்போது கூட்டணியை விட்டு வெளியே வந்த பிறகு திமுகவை விமர்சனம் செய்வது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார். செய்தியாளரைப் பார்த்து கூட்டணி தர்மத்திற்கு எதிராக நான் பேச மாட்டேன் என்று ஆவேசப்பட்டார். நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் கொடுத்த கேள்விக்கு அவர் அரசியலுக்கு வருகிறார். கற்பனையில் யார் வேண்டுமானாலும் வரலாம் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

    English Summary

    MDMK leader Vaiko expressed confidence that Vijay's TVK government would complete its full five-year term and dismissed claims that the government would last only three or six months.