திருடி விட்டு.. திருடனே திருடனை தேடுன கதையால்ல இருக்கு! திமுகவைச் சரமாரியாக விமர்சித்த மதிமுக வைகோ!

  • மதுரை: தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முழு பொறுப்பாளி திமுகதான்; குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது திமுகதான். இதனால் தான் திமுக தோற்றுப்போனது என்பது சிலருடைய பார்வை. SIR இல்லாமல் இருந்திருந்தால் விஜய் இன்னும் 30 கூடுதல் இடங்களைப் பெற்றிருப்பார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    Advertisement

    மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்," பழைய அரசுகளை எளிதாக அணுகிய ஸ்டெர்லைட் முதலாளியால் தற்போது விஜயைச் சந்திக்க முடியவில்லை.

    Advertisement

    முந்தைய ஆட்சிகளில் எளிதாக அணுகி தங்கள் பக்கம் வைத்துக்கொள்வார்கள். ஆனால், நேர்மையான ஆட்சியை நடத்தும் விஜய் அரசிடம் அவர்களால் நெருங்க முடியவில்லை. இது நேர்மையான ஆட்சிக்கு ஓர் உதாரணம்.

    வைகோ

    கமிஷனர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட இடங்களில் வற்புறுத்தினால் லஞ்சம் வாங்குவதாகப் பேசுகிறார்கள். நேற்று கூட பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று வந்தேன். முன்பு இருந்த கப்பம் கட்டினால்தான் காரியம் நடக்கும் என்ற நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது. சொன்ன வாக்குறுதியின்படி நேர்மையான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள் என்பதற்கு இதனை ஓர் உதாரணமாகக் கூறுகிறேன்.

    Advertisement
    அவரே இன்னும் வாய் திறக்கலையே.. அரசியலுக்கு வரப் போகும் தனுஷ்? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன திருமா!

    சட்டம் ஒழுங்கு

    கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகக் கூறுகிறார்கள். பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் கடுமையான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். அண்ணா ஆட்சியில் குறைவாக நடந்த குற்றங்கள், எம்ஜிஆர் ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள், கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொடூரமான கொலை, கொள்ளை சம்பவங்கள் என அனைத்து ஆட்சிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெண்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நான் போராடியிருக்கிறேன்.

    Advertisement
    அதெல்லாம் வதந்தி..பசும்பொன்னுக்கு சிஎம் விஜய் வர மாட்டார்! யூகங்களுக்கு டாட் வைத்த அமைச்சர் சிடிஆர்!

    கண்டன அறிக்கை

    போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க என்னை வருத்திக்கொண்டவன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன். இதற்கு முன்பு ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் சிறையிலேயே சித்திரவதை செய்யப்பட்டபோது பலர் கண்டன அறிக்கை வெளியிடவில்லை. 13 பேரை அரசு ஏவுதலின் பேரில் சுட்டுக்கொன்றார்கள். இதுபோன்ற சம்பவம் இந்த அரசில் ஏதாவது நடந்ததாகச் சுட்டிக்காட்ட முடியுமா? அப்படி ஏதாவது செய்திருக்கிறார்களா? கிடையாது.

    தலைமைச் செயலகம்

    நிர்வாகத்தில் அனுபவம் இல்லை என்று கூறுகிறார்கள். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்ற முடிவை முன்யோசனையின்றி எடுத்திருப்பதால், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டேன். தற்போது மறுபரிசீலனை செய்யப்படுவதாகக் கேள்விப்படுகிறேன். இந்த அரசைப் பொறுத்தமட்டில் மக்களுக்கு நேர்மையான ஆட்சியை அளிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. முதலமைச்சர் நேர்மையாக அரசை நடத்துகிறார்.

    Advertisement

    தேர்தல் ஆணையர்

    SIR பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாஜக அல்லாத கட்சிகள் டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தின. இந்தியக் கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்ததால் நானும் அதில் கலந்து கொண்டேன். SIR நடவடிக்கைக்கு முழுக்க முழுக்கக் காரணம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான். கேரளாவில் அவர் செயலாளராக இருந்தபோது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. அவரைத் தலைமைத் தேர்தல் ஆணையராக மோடி அரசு நியமித்து, தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்திப் பல குளறுபடிகளுக்கு வழிவகுத்துள்ளது.

    SIR நடவடிக்கை

    தமிழ்நாட்டில் SIR காரணமாகத்தான் விஜய் ஆட்சிக்கு வந்ததாகச் சில தலைவர்கள் தங்களுக்குத் தெரிந்த பார்வையில் கூறுகிறார்கள். நாடு முழுவதும் 13 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு யார் காரணம்? SIR இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் என்று சில தோழர்கள் தங்களது பார்வையில் கூறுகிறார்கள். ஆனால், 97 லட்சம் பேர் நீக்கப்படுவதற்கு திமுகதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

    Advertisement

    திமுக

    தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக வாக்குச்சாவடி அதிகாரிகள் வந்தபோது, வாக்காளர்களை நீக்கும் பணியில் திமுகவினர்தான் ஈடுபட்டார்கள். அனைத்து வேலைகளையும் எந்தக் கட்சியும் செய்யவில்லை. திமுகதான் செய்தது. இதனை ஏன் மறைக்கிறார்கள்? கொளத்தூரில் அமைச்சரும் திமுக செயலாளரும் அனைவரையும் வைத்து வார்டு வாரியாகவும், வாக்குச்சாவடி வாரியாகவும் வாக்காளர்களை நீக்கினார்கள்.

    வாக்காளர்கள் நீக்கம்

    தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முழுப் பொறுப்பாளி திமுகதான். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது திமுகதான். இதனால் திமுக தோற்றுப்போனது என்பது சிலருடைய பார்வை. SIR இல்லாமல் இருந்திருந்தால் விஜய் இன்னும் 30 கூடுதல் இடங்களைப் பெற்றிருப்பார். SIR காரணமாக திமுக தோற்கடிக்கப்படவில்லை. SIR மூலம் விஜய் கூடுதல் இடங்களைப் பெற்றிருக்க வேண்டியது தடுக்கப்பட்டது. அதற்குத் திமுகதான் காரணம்.

    ஞானேஷ் குமார்

    முதலில் அமைதியாக இருந்தவர்கள், தற்போது இந்தியா முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களும் இதுகுறித்துப் பேசத் தொடங்கியுள்ளனர். ஞானேஷ் குமார் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் அவரை நீக்க முடியும். ஞானேஷ் குமாரும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் 14 முறை 14 பிரச்சினைகளில் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்ற இருவரின் கருத்துகளையும் புறக்கணித்து, தனது விருப்பப்படி செயல்பட்டுள்ளார்.

    தர்மேந்திர பிரதான்

    எனவே, ஞானேஷ் குமார் அந்தப் பொறுப்பில் நீடிக்கக் கூடாது. அவர் நீக்கப்பட வேண்டும். தர்மேந்திர பிரதான் எப்படி ராஜினாமா செய்தாரோ, அதேபோன்று ஞானேஷ் குமாரையும் ராஜினாமா செய்ய வைக்க வேண்டியது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் பொறுப்பு. அவர்களின் எடுபிடியாகத்தான் தேர்தல் ஆணையர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    விஜய் அரசு

    தமிழகத்தில் ஒரு நல்ல, நேர்மையான அரசை வழங்க வேண்டும் என்ற இலக்குடன் விஜய் அரசு செயல்படுகிறது. அந்த அரசுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். நன்றாக இருக்கிறோம். கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்தால், அது சரியில்லை என்றால் அதைச் சுட்டிக்காட்டுவேன். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகவும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன்.

    பாஜக

    சில மாநிலங்களில் பாஜக அல்லாத அரசுகள் ஆட்சியில் உள்ளன. அந்த மாநில அரசுகளின் பொறுப்புகளுக்கு இடையே, மத்திய அரசின் பின்னணியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டுள்ளார். திருடிவிட்டுத் தேடும்போது திருடன், திருடன் என்று ஓடுவது போல, SIR நடவடிக்கையில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர் தற்போது திமுகதான் அதுகுறித்துப் பேசுகிறது. இதுகுறித்து அவர்கள் எப்படிப் பேச முடியும்?

    தவெக

    கூட்டணிக்குள் இருக்கும்போது, கூட்டணிக்கு வெளியே இருந்து தாக்கிப் பேசுவதைப் போன்ற கருத்துகளை நான் தெரிவிக்க மாட்டேன். இடைத்தேர்தலில் திமுக இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறது. ஆனால், வெற்றி பெறவில்லை. நாங்கள் வெற்றி பெறப்போகிறோம், தவெகவுக்கு எதுவும் கிடைக்காது, நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறோம் என்று கூறினார்கள். ஆனால், வெற்றி பெறவில்லை; தோற்றுவிட்டார்கள். தோல்விக்குப் பிறகு என்ன விளக்கம் அளிக்கிறார்கள்?

    மக்கள் ஆதரவு

    திமுகவை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். திமுகவைத் தூக்கி எறிந்துதானே மக்கள் தவெகவை ஆட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். பெரும்பாலான மக்களின் ஆதரவு இருப்பதால்தான் விஜய் இன்று முதலமைச்சராகியிருக்கிறார்." என்றார்.

    English Summary

    MDMK leader Vaiko accuses DMK of responsibility for 97 lakh voter deletions in Tamil Nadu and claims SIR affected Vijay’s seat tally.