தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 25ல் மதுரையில் தொடங்கி வைக்கும் விஜய்!

  • மதுரை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் விஜய் செப்டம்பர் 25ஆம் தேதி மதுரை வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று இந்த திட்டம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தவெகவின் சட்டசபைத் தேர்தல் வாக்குறுதியில், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தாய்மாமன் சீர் பெட்டகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஜூன் 23ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    Advertisement

    அதன்படி தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதியன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த தங்க மோதிரத்திற்கான டெண்டரை ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றன. 70:30 என்ற முறையில் இரு நிறுவனங்களுக்கும் டெண்டர் அளிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றதால், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் திட்டமிட்டபடி செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படவில்லை.

    Advertisement

    தற்போது விஜய் மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் செப்டம்பர் 25ஆம் தேதி மதுரையில் தொடங்க வைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    அதேபோல் விருதுநகரில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் சென்னை திருவான்மியூரில் செப்டம்பர் 22ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும் இந்த இரு திட்டங்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் உடனடியாக அமல்படுத்தப்படாது.

    English Summary

    Vijay: CM Vijay to Visit Madurai on September 25 to Launch ‘Thaimaman Thanga Mothiram’ Scheme