மதுரை: தமிழகம் தவெக கையில் சிக்கி, குரங்கு கையில் கிடைத்த பூமாலைபோல உள்ளது என்று அதிகாரிகள் வேதனையோடு உள்ளனர் எனவும், மக்களிடத்தில் அனுதாபத்தை உருவாக்கி தனி பெரும்பான்மை கிடைக்க மீண்டும் தேர்தல் நடத்த விஜயின் நட்பு வட்டாரங்கள் திட்டம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், த.வெ.க அரசு ராஜினாமா முடிவு குறித்து முதல் விஜய் தீவிரமாக பரிசீரித்து வருவதாகவே செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அரசு நிர்வாகத்தில் தொடர் தடுமாற்றம் முதல்வர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது இதனால் த.வெக அரசு ஆட்சி சக்கரத்தை செலுத்த தடுமாறுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
விஜய் பதவி ஏற்று 2 மாதங்கள் ஆகின்றன. ஆனால் சமூக வலைதளங்களில் இப்படி ஒரு ரீல்ஸ். அப்படி ஒரு மீம்ஸ் என சமூக வலைதளங்களில் விஜய்யை மையமாக வைத்து பல்வேறு பதிவுகள் சில வாரங்களாக வேகமாக வீசி, தேசிய அளவில் பல்வேறு மொழிகளில் அளவிலேயே பரவ வருகின்றன. இதை பார்க்கிற போது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரவால் முதல்வராக பதவி ஏற்ற போது ஊழலை ஒழிக்க வந்த மகானாக இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டார். இவையெல்லாம் இயல்பாகவே நடந்தது இல்லை. அவருக்குப் பின்னால் இருந்த அரசியல்வாதிகளின் இமேஜை வளர்த்தெடுக்கும் வியூக வகுப்பு நிறுவனங்கள் தான், இதையெல்லாம் செய்தன என்பது வெட்ட வெளிச்சமாக பின்னர் தெரியவந்தது. முதல்வர் விஜய்க்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது ஊழலை ஒழிக்க வந்த மகாத்மாவின் அவதாரமாக விஜய் இங்கே தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருகிறார். அவரைப் பற்றிய கதாநாயகன் பிம்பத்தை பெருக்கும் வகையில் மாயக்கதைகள் பலவும், நடக்காத நிகழ்வுகள் பழவும் இன்ஸ்டால் மூலமும், மீம்ஸ் கிரியேட்டர்கள் மூலமும் இயல்பு மீறி இலக்கணத்தை மீறி தேசிய அளவிலே பரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. கட்டுக் கதைகளை மையமாக வைத்து விஜய்யை ஒரு பெரும் தலைவராக உருவாக்க பரப்பப்படும் போலி செய்திகளை உடைத்து எறிந்து விழிப்புணர்வு ஜென்சி தலைமைக்கு வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிற நிலையிலே, இன்றைக்கு தமிழகத்திற்கு இடைத்தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிப்பு இடம் பெறவில்லை. அதோடு நீதிமன்றத்தின் இடைத்தேர்தலுக்கு தடை என்று உத்தரவால் விஜயின் தனி மெஜாரிட்டி கனவு பகல் கனவாகவே தொடர்கிறது. அதோடு கூட்டணியிலே விசிக, காங்கிரஸ், இடதுசாரிகளின் கூட்டணி கட்சிகளின் தொடர் குடைச்சல்களால் அடுத்தடுத்து சிக்கல்களால் இதற்கு பதில் தான் என்ன என முதல்வர் விஜய் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். இதற்கு ரீல்சிலும், மீம்சிலும் தீர்வு காண முடியாது என்பது விஜய்க்கு தெரியாது. அதோடு ஊழல் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கண்காணிப்பதற்கே ஒவ்வொரு நாளும் பெரிய அளவில் கஷ்டப்படுகிறார் முதல்வர் விஜய். அப்படி இருந்தும் 100 கோடி கோயில் சொத்து தனியாருக்கு தாரைவார்ப்பு தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக த.வெ.க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் தற்போதுஅவரைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார்கள். இதனால் த.வெ.க அரசு ராஜினாமா முடிவு குறித்து முதல் விஜய் தீவிரமாக பரிசீரித்து வருவதாகவே செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. எது எப்படியோ விஜய் சவால்களை சந்திக்க முடியாமல், எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக ரீல் போடுவது, மீம்ஸ் போடுவது, கிரியேட்டர்களை வைத்துக்கொண்டு கண்டன் கிரியேட்டிவ் செய்வதை தவிர வேறு ஒன்றும் தமிழகத்தில் துரும்பை கூட அசைக்கவில்லை இந்த த.வெ.க அரசின் 75 நாட்களில்" என்றார்.ஆர்.பி.உதயகுமார்
தவெக அரசு
இடைத்தேர்தல்
முதல்வர் விஜய்.
ராஜினாமா