மகன் எங்கே..ம்மா? திருப்பூர் போயிட்டான் என்ற அம்மா.. கடைசியில் ஆடிப்போன மதுரை

  • மதுரை: மதுரையில் கணவனை இழந்த பெண் ஒருவர், கஞ்சா மற்றும் மதுப் போதையில் தன்னைத் தாக்க முயன்ற மகனைக் கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, சடலத்தை வீட்டிற்குள்ளேயே மூன்று மாதங்களாக மறைத்து வைத்திருந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியில்தான் இப்படியொரு கொடுமை நடந்து, அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!!

    Advertisement

    வரிச்சியூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அய்யம்மாள்.. 50 வயதாகிறது.. இவரது கணவர் இறந்துவிட்டார்.. அதனால் அய்யம்மாள் தனது மகன் ராஜா மற்றும் மகள் மகாராணியுடன் வசித்து வந்துள்ளார்.

    Advertisement

    முனீஸ்வரி என்ற பெண்ணை காதலித்து ராஜா திருமணம் செய்து கொண்டார்.. ஆனால், ராஜாவுக்கு மதுவுக்கு அடிமையானவர்.. கஞ்சா போதைக்கும் அடிமையானவர்.. இதனால் ராஜாவை விட்டு அவரது பிரிந்துசென்றுவிட்டார்.. இதனால் அம்மாவுடனேயே வசித்து வந்துள்ளார் ராஜா..

    அம்மான்னு கூட பார்க்கல

    மதுபோதை, கஞ்சாவுக்கு நடுவில், பல்வேறு குற்ற வழக்குகளிலும் ராஜா ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி ஜெயிலுககும் சென்று வந்துள்ளார். இதனால் எந்நேரமும் போதை வெறியிலேயே மிதந்துள்ளார் ராஜா.. தினந்தோறும் தன்னுடைய அம்மாவிடம், தங்கை மகாராணியிடமும் பணம் கேட்டு தகராறிலும் ஈடுபட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    Advertisement

    இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு 11.30 மணியளவில் போதையில் வீட்டிற்குள் வந்துள்ளார் ராஜா.. வழக்கம் போல அம்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆபாச வார்த்தைகளால் அம்மாவை திட்டியிருக்கிறார்.. பிறகு தாக்கவும் செய்துள்ளார்.. ஒருகட்டத்தில் அம்மாவிடமே தவறாகவும் நடக்க முற்பட்டுள்ளார்.

    தண்ணீர் விட்டு கழுவிவிட்ட தாய்

    மகனின் இந்த அக்கிரமத்தை தாங்க முடியாத அய்யம்மாள், ஆத்திரத்தில் ராஜாவைக் கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்த ராஜாவின் தலை, கை மற்றும் உடல் முழுவதும் மாறி மாறித் தாக்கினார்.. இதில் பலத்த காயமடைந்த ராஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    Advertisement

    பெற்ற மகனே கண்முன்னே இறந்ததால் அதிர்ந்துபோன அய்யம்மாள், இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் ஊருக்குள் அவமானம் என்று நினைத்து, பிணத்தை மறைக்க நினைத்தார்..

    தனது வீட்டின் பின்புறம் பாத்ரூம் கட்டுவதற்காக ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் ராஜாவின் உடலைப் போட்டு மூடிவிட்டார். மேலும், சடலம் புதைக்கப்பட்ட குழியின் மீது விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்து மொத்தமாக மறைத்து விட்டார்.. வாசலில் வழிந்திருந்த ரத்தக்கறையை தண்ணீர் ஊற்றித் துடைத்து சுத்தப்படுத்தினார்.. இதற்கு பிறகு எந்தவித பயமுமில்லாமல், இயல்பாக அதே வீட்டிலேயே தங்கியிருந்தார்..

    அக்கம் பக்கத்திலிருப்பவர்கள், ஊரிலிருப்பவர்கள் மகன் எங்கே என்று கேட்டபோதெல்லாம், அவர் திருப்பூர் சென்றுவிட்டதாக சொல்லி அனைவரையும் ஏமாற்றி வந்துள்ளார்.

    Advertisement

    அதிர்ந்த விஏஓ ஆபீஸ்

    ஆனால், அய்யம்மாள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் கிராம மக்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இந்த விவகாரம் நாலாபுறமும் கசிந்து ஊருக்குள் அய்யம்மாள் பற்றின பேச்சாகவே இருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அய்யம்மாள், திடீரென கருப்பாயூரணி விஏஓ ஆபிசுக்கு சென்று, கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் தனது மகனைக் கொலை செய்து புதைத்துவிட்டதாக சொல்லி அதிர வைத்துள்ளார்..

    இதையடுத்து, புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் அய்யம்மாளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்., அத்துடன் அய்யம்மாளை அவரது வீட்டிற்கே அழைத்துச் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.. அப்போது மதுரை மாவட்ட எஸ்பி தேவநாதனும் அய்யம்மாள் வீட்டுற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    ஜெயிலுக்கு போன அய்யம்மாள்

    இறுதியில் கிழக்கு வட்டாட்சியர் முன்னிலையில், ராஜாவின் உடல் புதைக்கப்பட்ட குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுச் சம்பவ இடத்திலேயே அரசு மருத்துவர்கள் மூலமாக போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. பிறகு அங்கிருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அவரது மனைவியிடமும், தங்கை மகாராணியிடமும் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. பெற்ற தாயே தன் மகனை கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்துவிட்டு, 3 மாதங்களாக கேஷூவலாக நடமாடியது, மதுரையை மலைக்க வைத்துள்ளது...!!

    English Summary

    Where Is your Son? Mother Said He Went to Tiruppur.. What Happened Next Shocked Madurai