மதுரையில் பிஎம் மன்னன் வழக்கில் ஒற்றை கேள்வி.. உடனே சொந்த ஜாமீனில் விடுவித்த நீதிபதி.. என்ன நடந்தது?

  • குதிரைபேர விவகாரத்தில் சிக்கிய பி.எம்.மன்னன் ஒரு காலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். அப்போதுதான் மதுரை மாநகராட்சியின் துணை மேயராகவும் இருந்தார். ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, பி.எம்.மன்னன் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு, கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. குதிரைபேர விவகாரத்தில் சிக்கிய மன்னனை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்ததுடன் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளார்.

    Advertisement

    மதுரை மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. மதார் பதாருதீன் என்ற முஸ்தபா டந்த 4-ந்தேதி மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் மீண்டும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். தனக்கும் போன் செய்து முதற்கட்டமாக ரூ.15 கோடி வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு கொண்டு வருவோம். அப்போது த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றுகூறி மதுரையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தன்னிடம் பேசினார் என்றும் முஸ்தபா எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.

    Advertisement

    முதற்கட்டமாக ரூ.15 கோடியும், வாக்கெடுப்புக்குப்பிறகு ரூ.15 கோடியும் என ரூ.30 கோடி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினார் என்றும் அதற்கெல்லாம் நாங்கள் மயங்க மாட்டோம். என்னிடம் குதிரை பேரம் பேசியவர் குறித்த விவரம் விரைவில் வெளிவரும்" என்றும் முஸ்தபா எம்எல்ஏ பேட்டியின் போது கூறியிருந்தார்.

    இந்த நிலையில் த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா தரப்பில் மதுரை மத்திய குற்றத்தடுப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில், எம்.எல்.ஏ. முஸ்தபாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது, மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், அ.தி.மு.க. பிரமுகருமான பி.எம்.மன்னன் என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த புகார் தொடர்பாக மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக நேற்று காலையில் பி.எம். மன்னனின் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் அவரை, விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள மத்திய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு பிஎம் மன்னனை அழைத்து சென்றனர்.

    அங்கு மதுரை மாநகர மத்திய குற்றத்தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் உள்ளிட்டோர் பி.எம்.மன்னனிடம் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக சாரணை நடத்தினார்கள். இதனால் அங்கு அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் பி.எம்.மன்னனின் செல்போன் உரையாடல் பதிவுகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து பி.எம். மன்னனை போலீசார் கைது செய்து, நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றனர்.

    Advertisement
    மன்னன் மீது குறை சொல்லும் அளவுக்கு தவெக எம்எல்ஏ முஸ்தபா ஒன்றும் யோக்கியன் கிடையாது! செல்லூர் ராஜூ

    அதேபோல் குதிரை பேர புகாரின் பேரில், முஸ்தபா எம்.எல்.ஏ.வின் உதவியாளரான கனிராஜா என்பவரிடமும் விசாரணை நடந்தது. அவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பி.எம். மன்னனின் ஆதரவாளராக இருந்துள்ளார். அவரது செல்போனில் இருந்துதான் பி.எம். மன்னன் தொடர்பு கொண்டு, எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தது. இதுபற்றி விசாரணைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலையில் பி.எம்.மன்னனை, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மதுரையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான கோர்ட்டின் நீதிபதி ஜோசப்ஜாய் வீட்டுக்கு அழைத்துச்சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்கள். மன்னன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி கேட்டறிந்தார்.

    Advertisement

    அப்போது, மன்னனுக்கு ஜாமீன் வழங்கும்படி அவரது தரப்பு வக்கீல்கள் முறையிட்டனர். ஆனால், அரசு தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால்
    இந்த வழக்கில் பி.எம்.மன்னனை நவம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கெனவே சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவரை இன்றே (நேற்றே) விசாரணைக்கு அழைத்து வந்து கைது செய்தது ஏன் என நீதிபதி காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் மறுத்தார். தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிபதி ஜோசப்ஜாய், அதிமுக நிர்வாகி மன்னணை ரூ.25 ஆயிரம் சொந்த ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.
    எனினும் நாளை (அதாவது இன்று) சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பி.எம்.மன்னனுக்கு நிபந்தனை விதித்தார்.

    Advertisement

    தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பி.எம்.மன்னன், இந்த வழக்கு சம்பந்தமாக என்னை விசாரிப்பதற்காக அழைத்து வந்தனர். என்னை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டபோது, மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு இந்த விசாரணையைத் தொடர்கிறேன். இதுதொடர்பாக மற்றபடி வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

    மேலும், நாளை (இன்று) காலை 10 மணிக்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அதன்படி ஆஜராகிறேன். அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

    English Summary

    tvk Horse-trading case : Why did the judge release P.M. Mannan in Madurai on his own recognizance (personal bond)?