ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்.. சமரசம் ஆனதால் வழக்கு ரத்து

  • மதுரை: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பா**ல் புகாரில் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் எங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு அளித்தனர். இந்த மனு விசாரணையின் போது தூத்துக்குடி பெண் சமரசம் ஆனதால் வழக்கு ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவரும், தவெகவில் நிர்வாகியாக இருந்த பெண் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்து இருந்தார். அதில், தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாலசுப்பிரமணியம், ஜெயபால் ஆகியோர் தன்னை பா**ல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்து இருந்தார்.

    அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜூன் 1 ஆம் தேதி பாலசுப்பிரமணியம், ஜெயபால் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணன் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையில், இந்த பா**ல் சம்பவத்தில் எம்.எல்.ஏ. சரவணனுக்கு தொடர்பு இல்லை என்பது உறுதியானதாக சொல்லப்படுகிறது.

    இதற்கிடையே சிறையில் இருந்த பாலசுப்பிரமணியம், ஜெயபால் ஆகியோர் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விஜயகுமாரிடம், மனுதாரர்கள் மீது பா**ல் புகார் அளித்த பெண் சமரசமாக செல்ல முடிவு செய்து இருப்பதாக அந்த பெண் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, பாலசுப்பிரமணியம், ஜெயபால் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

    English Summary

    Two individuals were arrested following a harassment complaint filed by a woman from the Srivaikuntam area of ​​Thoothukudi district. The arrested persons petitioned the Madurai Bench of the Madras High Court seeking to quash the case against them. During the hearing, the Madurai High Court ordered the case to be quashed after the woman from Thoothukudi reached a compromise.