ஆற்றில் மிதந்து வரும் 3,000 கேஸ் சிலிண்டர்கள்.. தயவு செய்து பயன்படுத்தாதீங்க.. வார்னிங் கொடுத்த கலெக்டர்

  • மும்பை: மகாராஷ்டிராவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் தான் கேஸ் நிரப்பும் மையத்தில் இருந்து 3 ஆயிரம் சிலிண்டர்கள் படல்கங்கா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் இந்த கேஸ் சிலிண்டர்கள் பொதுமக்களின் கைகளில் கிடைத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட ஏஜென்ஸிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை பயன்படுத்த வேண்டாம் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மும்பையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பிற மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் படல்கங்கா ஆற்றில் சுமார் 3 ஆயிரம் சிலிண்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அதாவது ராய்காட் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள எச்பிசிஎல் படல்கங்கா கேஸ் நிரப்பும் மையத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த 3,000 சிலிண்டர்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த சிலிண்டர்கள் தான் படல்கங்கா ஆற்றில் மிதந்து செல்கின்றன.

    இதுபற்றி எச்பிசிஎல் கேஸ் நிரப்பும் மையத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ''கனமழையின் காரணமாக கேஸ் நிரப்பும் மையத்தின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வெள்ளம் கேஸ் நிரப்பும் மையத்துக்குள் நுழைந்தது. இதில் சிலிண்டர்கள் அடித்து செல்லப்பட்டனர். இதில் சில சிலிண்டர்களில் கேஸ் உள்ளன. மீதமுள்ள சிலிண்டர்கள் காலியாக உள்ளன. இந்த சிலிண்டர்கள் கிடைத்தால் பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கக் கோரிக்கை வைக்கிறோம்'' என்றார்.

    Advertisement

    இதுபற்றி ராய்காட் கலெக்டர் கிஷான் ஜாவ்லி கூறுகையில், ''ஆற்றில் மிதந்து வரும் சிலிண்டர்கள் பொதுமக்களின் கைகளில் கிடைத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சியிடம் வழங்க வேண்டும். அதன்படி எச்பிசிஎல் கம்பெனி, எச்பிசிஎல் டீலர், காலாபூர் தாசில்தார் அலுவலகம், சப் டிவிஷனல் அதிகாரியின் அலுவலகத்தில் இந்த கேஸ் சிலிண்டரை வழங்கலாம்.

    ஏனென்றால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கேஸ் சிலிண்டர்களில் பாதுகாப்பு உறுதி செய்யும் தன்மை இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. இதனால் இந்த கேஸ் சிலிண்டரை பயன்படுத்துவது என்பது ஆபத்தை விளைவிக்கலாம்.'' என்றார். கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக ராய்காட் உள்ளது. இந்த மாவட்டத்தின் பல குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Maharashtra is currently experiencing torrential rains. Amidst this, a video showing 3,000 gas cylinders being washed away from a refilling plant into the Patalganga River has surfaced online and is spreading rapidly. Authorities have issued a warning stating that if members of the public find any of these cylinders, they must immediately hand them over to the concerned agency and must not use them.