பிரபல நடிகைக்கு போதை பொருள் கொடுத்து பலாத்காரம்! 73 வயது இயக்குநர் அதிரடி கைது! பகீர்

  • மும்பை: பிரபல இயக்குநர் மீது நடிகை ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை அளித்துள்ளார். 73 வயதான அந்த இயக்குநர் தனக்கு போதை பொருள் கொடுத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அந்த நடிகை புகாரளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட இயக்குநரை அதிரடியாக கைது செய்தனர்.

    சினிமா துறை முன்பு இருந்ததை விட இப்போது மாறியிருந்தாலும் கூட இன்னுமே அங்கு பாலியல் சுரண்டல் தொடர்ந்து நடந்தே வருகிறது. குறிப்பாக நடிகையிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

    73 வயது இயக்குநர்

    33 வயது பிரபல நடிகை ஒருவர் அளித்த பலாத்காரம், பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் புகாரின் அடிப்படையில் பாலிவுட் திரைப்பட இயக்குநர் ஷகீல் நூரானியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 73 வயதான நூரானி, சுமார் 40 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்ததாக கூறப்படும் நிலையில், மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    மல்வானி போலீசார் அவரை கைது செய்து தற்போது காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், நூரானி மீதான குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அந்த நடிகை போலீஸ் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

    என்ன நடந்தது!

    அதில் அந்த நடிகைக்கு நூரானியுடன் கடந்த 2016ல் அறிமுகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பல ஆண்டுகளாக நூரானி தன்னை மீண்டும் மீண்டும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சில சந்தர்ப்பங்களில் தனக்கு போதைப்பொருள் கொடுத்து, தான் மயக்கமடைந்த போது ஆபாசமான மற்றும் பிரைவேட் வீடியோக்களை நூரானி பதிவு செய்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி, தன்னை தொடர்ந்து பிளாக்மெயில் செய்ததாகவும் நடிகை போலீசாரிடம் கூறியுள்ளார். இதனால் தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து நூரானியை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

    கைது

    சுமார் 40 நாட்களாக அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இருப்பினும், அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த சூழலில் தான் அவர் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மல்வானி போலீசார் அங்கு சென்று நூரானியை கைது செய்தனர்.

    நூரானியின் கைது குறித்து துணை காவல் ஆணையர் சந்தீப் குகே கூறுகையில், "நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம். சட்டப்படி இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது நூரானி போலீஸ் காவலில் இருக்கும் சூழலில், அந்த நடிகையின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யார் இந்த ஷகீல் நூரானி?

    ஷகீல் நூரானி பாலிவுட் திரைப்பட துறையில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் 73 வயதான நூரானி மீது தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் நடிகை தெரிவித்துள்ள பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் மற்றும் பிளாக்மெயில் உள்ளிட்ட புகார்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் நூரானி மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை

    English Summary

    Mumbai Police have arrested filmmaker Shakeel Noorani after a 33-year-old actress accused him of assault and abuse(பலாத்கார வழக்கில் பிரபல இயக்குநர் கைது): Bollywood Director arrested for assault complaint.