நடிகர் அமீர்கான் 3வது திருமணம்.. 61 வயதில் வயது காதலி கவுரியை கரம்பிடித்தார்.. யார் இந்த மணப்பெண்?

  • மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான் தனது 61வது வயதில் மும்பை வீட்டில் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் 47 வயது காதலியான கவுரி ஸ்ப்ராட்டை இன்று திருமணம் செய்தார். அமீர்கானுக்கு இது 3வது திருமணமாகும். அவரது காதலி கவுரி ஸ்ப்ராட்டுக்கு இது 2வது திருமணமாகும். இந்நிலையில் தான் அமீர்கானின் மனைவி கவுரி ஸ்ப்ராட்டின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

    Advertisement

    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். இவருக்கு 61 வயது ஆகிறது. இவர் 47 வயது நிரம்பிய கவுரி ஸ்ப்ராட் என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் ஜுலை 5ம் தேதி நடைபெறும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    அதன்படி மும்பை பாந்த்ராவில் உள்ள அமீர்கானின் வீட்டில் இன்று திருமணம் நடந்தது. சரியாக இன்று மதியம் 12.45 மணிக்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அமீர்கான் கவுரி ஸ்ப்ராட்டை கரம்பிடித்தா். இருவரும் தங்களின் திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர்.

    இந்த திருமண விழா மிகவும் சிம்பிளாக நடந்தது. அமீர்கான் மற்றும் கவுரி ஸ்ப்ராட்டின் குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். மொத்தம் 150 பேர் வரை பங்கேற்றுள்ளனர். அமீர்கானின் மகன் ஜுனைத், மகள் ஈரா, அசாத், கவுரி ஸ்ப்ராட்டின் மகன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இது அமீர்கானுக்கு 3வது திருமணம் ஆகும். அதேபோல் இது கவுரி ஸ்ப்ராட்டுக்கு 2வது திருமணம் ஆகும்.

    Advertisement

    முன்னதாக நடிகர் அமீர்கான் 2 திருமணம் செய்திருந்தார். 2 மனைவிகளுடன் விவாகரத்து பெற்றிருந்தார். முதலாவதாக அமீர்கான் 1986ல் ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தயாரிப்பாளர் ஆவார். இவர்களுக்கு ஜூனைத் கான் என்ற மகனும், ஐரா கான் என்ற மகளும் உள்ளனர்.

    2002ல் ரீனாவை பிரிந்த அமீர்கான் 3 ஆண்டுகள் கழித்து 2005ல் கிரண் ராவ்வை திருமணம் செய்தார். இவர் இயக்குநர் ஆவார். இந்த தம்பதிக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். அமீர்கான் - கிரண் ராவ் தம்பதி 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பிறகு 2021ல் கிரண் ராவ்வையும், அமீர்கான் விவாகரத்து செய்தார். இந்நிலையில் தான் தற்போது அமீர் கான் தனது காதலியான கவுரி ஸ்ப்ராட்டை 3வது திருமணம் செய்துள்ளார்.

    Advertisement

    அமீர்கான் கரம்பிடித்துள்ள காதலி கவுரி ஸ்ப்ராட்டுக்கு ஏற்கனவே திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார். அவரது பெயர் க்யூன். இதனால் கவுரிக்கு இது 2வது திருமணம் ஆகும். கவுரி ஸ்ப்ராட் பெங்களூரை சேர்ந்தவர்.இவர் பேஷன், ஸ்டைலிங் மற்றும் போட்டோகிராபி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார்.

    அமீர்கான் மற்றும் கவுரி ஸ்ப்ராட் இடையே 25 ஆண்டுகால நட்பு உள்ளது. அமீர்கானின் பட தயாாரிப்பு நிறுவனத்திற்காக கவுரி ஸ்ப்ராட் பணியாற்றி உள்ளார். இது இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தியது. இருவருக்குமான நட்பு காதலாக மாறியது.

    2 பேரும் சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றது அதனை உறுதி செய்யும் வகையில் இருந்தன. கடந்த ஆண்டு அமீர்கான் தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடியபோது கவுரி ஸ்ப்ராட்டை பலருக்கும் அறிமுகம் செய்து வைத்து இன்று கரம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Actor Aamir Khan Marriage: Leading Bollywood actor Aamir Khan married his 47-year-old partner, Gauri Spratt, today at his Mumbai residence in the presence of family and friends. This marks Aamir Khan's third marriage and Gauri Spratt's second. Amidst this, key details regarding Gauri Spratt's background have emerged.