அபிஜித் தீப்கே வீட்டில் சோகம்.. கைதுக்கு நடுவே மகாராஷ்டிராவில் பாட்டி திடீர் மரணம்.. என்ன நடந்தது?

  • மும்பை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான அபிஜித் தீப்கேவின் பாட்டி இன்று மகாராஷ்டிராவில் காலமானார். டெல்லியில் போராட்டம் நடத்த சென்று விமானத்தில் வைத்து அபிஜித் தீப்கே போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது பாட்டியின் உயிர் பிரிந்த நிலையில் அதன் பின்னணி குறித்த சோகமான தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவி அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார் அபிஜித் தீப்கே. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி இன்று டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தான் முன்னெடுத்து வருகிறது.

    Advertisement

    இந்த போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தான் அபிஜித் தீப்கேவின் வீட்டில் சோக சம்பவம் நடந்துள்ளது.

    அபிஜித் தீப்கேவின் பாட்டி சாவித்ரிபாய் தீப்கே திடீரென்று இறந்துள்ளார். இவருக்கு வயது 85. இவர் தான் அபிஜித் தீப்கேவின் தந்தையான பகவான் தீப்கேவின் தாய் ஆவார். சாவித்ரிபாய் தீப்கே, மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டம் சாண்டூக் பிம்ரி கிராமத்தில் வசித்து வந்தார்.

    வயது முதிர்வு காரணமாக அவர் நீண்டகாலமாக உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தார். மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. இதுபற்றி அறிந்தததும் அபிஜித் தீப்கேவின் தந்தை பகவான் தீப்கே - தாய் அனிதா தீப்கே ஆகியோர் சாண்டூக் பிம்ரி கிராமத்துக்கு சென்றுள்ளனர்.
    அங்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாட்டி சாவித்ரிபாய் தீப்கே இறந்துள்ள நிலையில் அபிஜித் தீப்கே இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    ஏனென்றால் அபிஜித் தீப்கேவை இன்று காலையில் டெல்லி போலீசார் கைது செய்து சிறை வைத்துள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தான் அறிவித்தது. இதனால் போராட்டத்தில் பங்கேற்க அபிஜித் தீப்கே இன்று காலையில் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார். அவர் பயணித்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் உடனடியாக போலீசார் அபிஜித் தீப்கே, கரப்பான்பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களான சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

    Advertisement

    இதனால் பாட்டி சாவித்ரிபாய் தீப்கேவின் இறுதிசடங்கில் அபிஜித் தீப்கே பங்கேற்பாரா? அவர் பங்கேற்க அனுமதி கேட்டால் போலீசார் அனுமதி கொடுப்பார்களா? என்பது மில்லியன டாலர் கேள்வியாக உள்ளது.

    English Summary

    The grandmother of Abhijeet Dipke , the founding coordinator of the Karappanpoochi Janata Party, passed away in Maharashtra today. She breathed her last while Abhijit Deepke was under police arrest after having gone to Delhi to stage a protest.