இரவோடு இரவாக கரப்பான் பூச்சி கட்சி தலைவர் தீப்கே கைது? மும்பையில் என்ன நடந்தது! உச்சக்கட்ட பரபரப்பு

  • மும்பை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி இன்று போராட்டத்தை தொடங்கவுள்ளது. மும்பையில் இந்த போராட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அதற்கு முன்பு நேற்று நள்ளிரவில் அக்கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நீட் எதிராக வெற்றிகரமாக மாணவர் போராட்டத்தை கரப்பான் பூச்சி கட்சி நடத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து சமூகம் சார்ந்து பல்வேறு வேலைகளில் கரப்பான் கட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நாடு முழுக்க உள்ள அரசு பள்ளிகளில் உள்ள தரம் குறித்தும் கரப்பான் கட்சி ஆய்வு செய்து வந்திருந்தது.

    Advertisement

    கரப்பான் பூச்சி ஜனதா

    இதற்கிடையே இப்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் குதிக்கிறது. எஸ்ஐஆர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்தாக சொல்லி சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், கரப்பான் பூச்சி கட்சி இன்று தொடங்கி நாடு முழுக்க போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்த போராட்டம் மும்பையில் தொடங்கவுள்ள நிலையில், நேற்றிரவே அபிஜித் தீப்கே மும்பை சென்றிருந்தார். இதற்கிடையே மும்பை போலீசார் அவரை நேற்று தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர். நேற்று மாலை தீப்கே தனது ஆதரவாளர்களுடன் மரைன் டிரைவ் பகுதியில் சில பதாகைகளை ஏந்தியபடி இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பெண் காவல் ஆய்வாளர், தீப்கேவிடம் விசாரணை நடத்தி அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

    Advertisement

    மும்பை போலீஸ் மறுப்பு

    இருப்பினும், தீப்கே கைது செய்யப்படவில்லை என்றும் அவர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவில்லை என்றும் மும்பை காவல்துறை மறுத்துள்ளது. மாலை மரைன் டிரைவ் பகுதியில் இருந்த தீப்கே, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுக்கொண்டும், பொதுமக்களை சந்தித்துக்கொண்டும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு தொந்தரவு தரும்படி செயல்பட்டதால் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக மும்பை போலீசார் கூறியுள்ளனர்.

    ஆனால், இந்த சம்பவம் குறித்து தீப்கே வேறு விதமாக தெரிவித்துள்ளார். தன்னிடம் வந்த பெண் காவல் அதிகாரி ஒருவர், "ஒரு டீ குடிக்கலாம்" என்று தன்னை அழைத்து சென்றதாகவும் அதன் பின்னர் தன்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு தன்னை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும் தீப்கே தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நக்கல்

    இருப்பினும், காவல் நிலையத்தில் தனக்கு டீ எதுவும் வழங்கப்படவில்லை என்று நக்கலாக பதிவிட்டுள்ள தீப்கே, தனது நேரத்தை வீணடிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையில் தன்னை பின்னர் விடுவித்திருக்கலாம் என்றும் தீப்கே தெரிவித்துள்ளார்.

    பரபரப்பு

    காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பின்னர், செம்பூரில் உள்ள அம்பேத்கர் விடுதிக்குச் சென்ற தீப்கே, அங்குள்ள மாணவர்களை சந்தித்துள்ளார். அது தொடர்பான போட்டோக்களையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்றைய தினம் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    English Summary

    Cockroach Janata Party is set to begin a protest in Mumbai against Chief Election Commissioner Gyanesh Kumar over(கரப்பான் பூச்சி கட்சி தலைவர் கைது): Abhijit Dipke Detained latest news in tamil.