ஐஐடி மும்பை மாணவர் திடீர் தற்கொலை.. ‘சாட்ஜிபிடி’ உதவியுடன் தேர்வெழுதி சிக்கியதால் துயரம்.. ஷாக்

  • மும்பை: மும்பை ஐஐடி கல்லூரியில் 'சாட்ஜிபிடி'யை பயன்படுத்தி தேர்வெழுதி சிக்கிய 2ம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரியில் சாஹில் வகோடி என்ற மாணவர்ன படித்து வந்தார். இவர் எனர்ஜி சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் படிப்பை 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தான் நேற்று மாலையில் சாஹில் வகோடி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சாஹில் வகோடியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் சாஹில் வகோடி தேர்வு அறைக்கு செல்போனை எடுத்து சென்றுள்ளார். பிறகு கேள்வித்தாளை போட்டோ எடுத்து அதற்கு 'சாட்ஜிபிடி'யிடம் பதில் கேட்டு எழுதியுள்ளார். இதனை தேர்வறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்த நிலையில் கல்லூரி நிர்வாகம் அவரை கண்டித்ததும், அதன்பிறகு தான் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதற்கிடையே தான் சம்பவம் பற்றி அறிந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சாஹில் வகோடியின் தற்கொலை முடிவுக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம். சாஹில் வகோடியை ஒரு ஆண்டு வரை சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டியது தான் அவரது இந்த முடிவுக்கு காரணம் என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து மாணவர்களில் கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தினர்.

    அதேபோல் மாணவர்கள் மட்டுமின்றி சாஹில் வகோடியின் தாய் கூறுகையில்,''என் மகன் கொல்லப்பட்டுள்ளான். அவனுக்கு ஏராளமான தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு நீதி வேண்டும். இதுதொடர்பாக நாங்கள் புகார் அளித்துள்ளோம்'' என்றார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை ஐஐடி மும்பை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ''கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. இன்று காலையில் சம்பந்தப்பட்ட மாணவர் சாட்ஜிபிடியில் கேள்வித்தாளை போட்டோ எடுத்து போட்டு பதில் கேட்டு தேர்வு எழுதி சிக்கினார். அதன்பிறகு அவர் படிக்கும் துறையின் தலைவர் முன்னிலையில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

    இந்த சம்பவம் எதிர்காலத்தை எந்த வகையிலும் பாதிக்காது. இனி இப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது. அதன்பிறகு ஹாஸ்டல் அறைக்கு சென்றவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவத்தில் இறந்த மாணவரின் நண்பர்கள், வகப்பு தோழர்கள், ஃபேக்கல்டி மெம்பரர்ஸ் உள்பட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். சம்பந்தப்பட்ட மாணவரின் இறப்பிற்கான காரணம் பற்றி உரியவர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

    ஐஐடி மும்பை வளாகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை இப்படியான தற்கொலைகள் நடந்துள்ளன. இருப்பினும் கடந்த 7 மாதத்தில் 3வது மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு ஜூலை மாதத்தில் 20 வயது நிரம்பிய 2வம் ஆண்டு பிடெக் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இப்போது சாஹில் வகோடி தற்கொலை செய்துள்ளார்.

    English Summary

    IIT Mumbai Student Suicide: The incident where a second-year student at IIT Bombay died by hanging—after being caught using ChatGPT to take an exam—sent shockwaves through the community. A major commotion ensued as students launched protests to condemn the incident.