அண்ணா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி.. ஐசியூவில் தீவிர சிகிச்சை.. என்னாச்சு அவருக்கு?

  • மும்பை: அண்ணா ஹசாரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள அண்ணா ஹசாரவின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    Advertisement

    ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் அமைப்பை கொண்டு வர கடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை முன்னெடுத்தவர் அன்னா ஹசாரே. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அண்ணா ஹசாரேவின் இந்த போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    திடீர் உடல்நலக்குறைவு

    டெல்லியில் அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்கள் ஆதரவு அளித்தனர். அண்ணா ஹசாரேவின் போராட்டத்தால் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. 87 வயதான அண்ணா ஹசாரே தனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் ஓய்வு எடுத்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு அண்ணா ஹசாரவின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

    Advertisement

    என்னாச்சு அவருக்கு?

    அண்ணா ஹசாரேவுக்கு கிட்னி கோளாறு மற்றும் கடுமையான நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. அண்ணா ஹசாரே விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் அண்ணா ஹசாரே விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள். அண்ணா ஹசாரவின் உடல் நிலை பற்றிய அறிக்கையை சற்று நேரத்தில் மும்பை மருத்துவமனை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Anna Hazare has been admitted to a hospital. Following a sudden deterioration in his health, he was transported by ambulance to a hospital in Mumbai. Doctors are monitoring his condition in the ICU.