CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கான் இந்தியரே கிடையாது.. பாஜக வைக்கும் பரபர குற்றச்சாட்டு!

  • மும்பை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி மற்றும் மும்பையில் நேற்று போராட்டங்கள் நடந்தன. இதில், பாலிவுட் நடிகர் இம்ரான் கான் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், அவரது குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான கிரித் சோமையா வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    நேற்று மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் CJPக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்தில் இம்ரான் கான் பங்கேற்றிருந்தார். ஆனால் அவர் வெளிநாட்டு குடிமகன் என்பதால், இந்தியாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணை காவல் ஆணையருக்கு சோமையா கடிதம் எழுதியிருக்கிறார்.

    Advertisement

    இதற்கு பதிலளித்த இம்ரான் கான், இந்த நகரின் ஒரு அங்கமாக, மக்களின் குரல் ஒடுக்கப்படுவதை எதிர்த்து ஒரு குடிமகனாகவே இங்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் வெளிநாட்டினருக்கு இந்தியாவில் போராட கட்டுப்படுத்தப்பட்ட உரிமை மட்டுமே உள்ளதாகவும் பேச்சுரிமை மற்றும் கூட்டம் கூடும் உரிமைக்கான அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19 இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சட்ட நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

    SIR விஷயத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரண்டு ஆணையர்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. SIR மூலம் கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியிலும், மும்பையிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    போராட்டத்தை தடுக்க மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. இப்படி இருக்கையில் நேற்று மும்பை போராட்டத்தில் இம்ரான் கான் பங்கேற்றிருந்தது பரவலாக பேசப்பட்டது. பாலிவுட் திரை உலகில் இருந்து யாருமே இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், ஒரே ஒரு நடிகர்.. இம்ரான் கான் மட்டும் பங்கேற்றிருப்பது, பாலிவுட்டில் முதுகெலும்பு உள்ள ஒரே 'கான்' இவர்தான் என்றும் நெட்டிசன்கள் கூறியிருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது இம்ரான் கானின் குடியுரிமை குறித்து பாஜக கேள்வி எழுப்பியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    English Summary

    Actor Imran Khan: Protests took place yesterday in Delhi and Mumbai demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar; Bollywood actor Imran Khan participated in these protests. Amidst this, BJP leader Kirit Somaiya has raised questions regarding his citizenship and urged that action be taken against him.