அவ்வளவு அக்கறை இருந்தால் இந்திய குடியுரிமை வாங்கியிருக்கலாமே? பாலிவுட் நடிகரிடம் நீதிபதிகள் கேள்வி

  • மும்பை: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக பாலிவுட் நடிகர் இம்ரான் கான், மும்பை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். இனிமேல் இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

    Advertisement

    கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தேர்தல் ஆணையம் மற்றும் எஸ்ஐஆர் குறித்த விவகாரம் தான் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக நாடு முழுக்க எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். அப்படி கடந்த அக்டோபர் 10ம் தேதி மும்பையில் எஸ்ஐஆருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

    Advertisement

    பாலிவுட் நடிகர் இம்ரான் கான்

    அதில் 42 வயதான பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கான் பங்கேற்றார். பாலிவுட் டாப் ஸ்டார் அமீர் கானின் உறவினரான இவர், போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் என்ன தான் பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்தாலும் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவருக்கு இந்திய குடியுரிமை இல்லை. இதையடுத்து அவர் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதற்காக அவருக்கு "லீவ் இந்தியா நோட்டீஸும்" வழங்கப்பட்டது..

    இதை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ரான் கான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்றும், வெளிநாட்டு இந்திய குடிமகன் அட்டையை மட்டுமே வைத்திருப்பவர் என்றும் சுட்டிக்காட்டினர். இதனால் அவருக்கு இந்திய குடிமகனை போல அரசியல் போராட்டங்களில் பங்கேற்க உரிமை இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Advertisement

    நீதிபதிகள் அதிருப்தி

    அவர்கள் மேலும், "நீங்கள் ஓசிஐ அட்டை வைத்திருப்பவர். இந்திய குடிமகனை போல நடந்துகொள்ள முடியாது. எஸ்ஐஆர் குறித்து கருத்து தெரிவிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? போராட்டத்தில் பங்கேற்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இனி மேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று நீதிமன்றத்தில் தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறினர்.

    இம்ரான் கான் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெங்கடேஷ் தோண்ட், இம்ரான் தனது வாழ்நாள் முழுவதையும் இந்தியாவிலேயே கழித்தவர் என்றும் அமெரிக்காவில் பிறந்ததால் மட்டுமே அந்நாட்டுக் குடியுரிமை பெற்றுவிட்டார் என்றும் விளக்கினார். இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு வேலை செய்து வருவதாகவும் போராட்டத்தில் பங்கேற்பதால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகளை அவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றும் வாதிட்டார்.

    Advertisement

    ஏன் இந்திய குடியுரிமை வங்கல?

    இருப்பினும் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "இந்தியாவில் வளர்ந்திருந்தாலும் அவரது வெளிநாட்டு குடியுரிமை நிலை மாறாது. அமெரிக்காவில் ஓர் இந்திய குடிமகன் இதுபோன்ற போராட்டத்தில் பங்கேற்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், ஏன் அவர் இந்திய குடியுரிமையை கோரி விண்ணப்பிக்கவில்லை" எனவும் கேட்டனர். மேலும், இனிவரும் காலத்தில் இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினர்..

    அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு முன்பும் பல போராட்டங்களில் அவர் பங்கேற்றதாகவும், ஆத்திரமூட்டும் கருத்துகளை தெரிவித்ததாகவும் குற்றம்சாட்டினார். மன்னிப்பு கோருவதால் மட்டும் இந்த குற்றச்சாட்டுகள் முடிவுக்கு வந்துவிடாது என்றும் வாதிட்டார்.

    Advertisement

    மன்னிப்பு கேட்கணும்

    இதையடுத்து பாலிவுட் நடிகர் இம்ரான் கான், மும்பை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். இனிமேல் இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். நடிகர் என்பதால் அவருடைய கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும், OCI அட்டை வைத்திருப்பவர்கள் இந்திய குடிமக்களை போல அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதையடுத்து வழக்கு விசாரணை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    English Summary

    Bollywood actor Imran Khan has tendered an unconditional apology before the Bombay High Court for participating in an anti-SIR protest(மும்பை நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட இம்ரான் கான்): Imran Khan Apologises to Bombay High Court.