வெறும் ரூ.6,000 கடனுக்காக பிரபல பாலிவுட் நடிகை கொலை.. ஒரே ஒரு சின்ன தப்பு.. சிக்கிய கொலையாளிகள்

  • மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தொலைக்காட்சி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. ஏசி இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் வீட்டின் கதவு மட்டும் வெளியே இருந்து பூட்டப்பட்டிருந்தது. 27 வயதான நடிகை கிருத்திகா சவுத்ரி பல நாட்களாக வெளியில் வரவில்லை. இறுதியில் வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம் தான் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    2017 ஜூன் 12ம் தேதி பிற்பகல் சுமார் 3.45 மணியளவில், அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஸ்ரீ பைரவ்நாத் சொசைட்டியின் 5-வது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்தபோது, வீட்டில் படுக்கையில் கிருத்திகாவின் அழுகிய உடல் கிடந்தது. அவர் இரவு உடையில் இருந்தார். தலையில் பலத்த காயங்கள் இருந்தன.

    Advertisement

    கொலை

    அருகில் ரத்தக்கறை படிந்த பித்தளை ஆயுதம் (brass knuckle) ஒன்று கிடந்தது. சந்தேகத்திற்குரிய வெள்ளை நிற பொடியும் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. கிருத்திகாவின் செல்போன் படுக்கைக்கு அருகில் இருந்த நிலையில், குடும்பத்தினர் தொடர்ந்து அவரை தொடர்புகொள்ள முயன்றனர். அவரது சகோதரர் தீபக் சவுத்ரி, ஜூன் 8ம் தேதிதான் கடைசியாக கிருத்திகாவிடம் பேசியிருந்தார். அதன் பிறகு அவரது கால்களுக்கு பதில் இல்லை. பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் நண்பர் ஒருவர் அனுப்பிய வாழ்த்துக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

    போலீஸ் விசாரணை

    பிரேதப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களே மரணத்துக்கு காரணம் என தெரியவந்தது. கிருத்திகா தலையில் மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது. கொலையாளிகள் தங்கள் அடையாளத்தை மறைக்க முயன்றதாக போலீசார் சந்தேகித்தனர். மேலும், கொலையாளிகள் திட்டமிட்டே வீட்டில் டிவி மற்றும் ஏசி தொடர்ந்து இயங்கும் வகையில் விட்டுவிட்டு, கதவை வெளியே பூட்டிச் சென்றதாக கூறப்பட்டது. இதனால் உடல் அழுக ஆரம்பிக்க லேட் ஆகும் என அவர்கள் நினைத்துள்ளனர்.

    Advertisement

    இதனால் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடிக்கவே பல நாட்கள் ஆகும். அதற்குள் நாம் தப்பிவிடலாம் என்பதே அவர்கள் திட்டமாக இருந்துள்ளது. ஆனால், அவர்கள் செய்த ஒரு தவறு பின்னர் வழக்கில் மிக பெரிய தடயமாக மாறியது. அதாவது வீட்டில் கிருத்திகாவின் ரத்தம் படிந்திருந்த ஆணின் சட்டை ஒன்று கிடைத்தது.

    யார் இவர்!

    உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த கிருத்திகா, முதலில் டெல்லிக்கு சென்று செல்போன் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் திருமணம் செய்து 2011ல் மும்பைக்கு வந்தார். ஆனால் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. விவாகரத்துக்கு பிறகு நடிப்பு மற்றும் மாடலிங்கில் கவனம் செலுத்திய அவர், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 2013-ல் வெளியான ரஜ்ஜோ என்ற திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரியாகவும் நடித்திருந்தார்.

    Advertisement

    பாலிவுட் நடிகை கொலை வழக்கு என்பதால் இது கவனம் பெற்றது. அவரது முன்னாள் கணவர் விஜய் திவேதியும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டார். அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை பின்னர் கிருத்திகா அறிந்ததாகவும், இருவரும் பிரிந்ததாகவும் செய்திகள் தெரிவித்தன. கிருத்திகாவுடன் மீண்டும் வாழ விஜய் முயன்றபோதும், அவர் மறுத்ததாக கூறப்பட்டது.

    சிக்கிய கொலையாளிகள்

    வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது கொலை செய்யப்பட்ட நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்து வெளியேறியது பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், கிருத்திகாவின் சில நகைகள் மற்றும் பொருட்கள் காணாமல் போயிருந்ததாக அவரது சகோதரர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    Advertisement

    ரத்தக்கறை படிந்த சட்டை மற்றும் அதிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ உள்ளிட்ட தடயங்களை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில் பன்வேல் பகுதியில் இருவரை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் ஷகீல் நசீம் மற்றும் வாசுதேவ் என அடையாளம் காணப்பட்டனர். விசாரணையில் கொலைக்கான காரணமாக அவர்கள் சொல்லியது தான் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வெரும் ரூ.6000க்காக கொலை

    வெறும் ரூ.6,000 கடனுக்காக கிருத்திகா கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நசீம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகவும், சுமார் ஓராண்டுக்கு முன்பு கிருத்திகாவுக்கு போதைப்பொருள் வழங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது. அதற்கான ரூ.6,000 தொகையை அவர் திருப்பிக் கொடுக்க வேண்டி இருந்துள்ளது. ஆனால், பணத்தை தராமல் கிருத்திகா தொடர்ந்து தள்ளிப்போட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    Advertisement

    படுகொலை

    இந்தச் சூழலில் தான் ஜூன் 8ம் தேதி நசீம், வாசுதேவுடன் கிருத்திகாவின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. மூவரும் ஒன்றாக உணவு சாப்பிட்டதாகவும், பின்னர் பணம் தொடர்பாக பேச்சு எழுந்தபோதே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். அப்போது நசீம் தன்னுடன் கொண்டு வந்திருந்த ஆயுத்தை வைத்து கிருத்திகாவின் தலையில் மூன்று முறை தாக்கியுள்ளார். இதில் தான் அவர் உயிரிழந்துள்ளார்.

    கிருத்திகாவின் ரத்தம் தனது சட்டையில் படிந்ததால், நசீம் அந்த சட்டையை கழற்றி அங்கேயே விட்டுச் சென்றதாகவும் கூறப்பட்டது. பின்னர் இருவரும் டிவி மற்றும் ஏசியை ஆன் செய்துவிட்டு, வீட்டை வெளியே பூட்டி தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

    அதேநேரம் போலீசாரின் இந்த ரூ.6000 கடன் விளக்கத்தை கிருத்திகாவின் குடும்பத்தினர் நம்பவில்லை. கொலை செய்யப்பட்ட போதே கிருத்திகாவின் வீட்டில் இருந்து ரூ.22,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டிருந்தது. பணம் கையில் இருந்தபோது, ரூ.6,000க்காக தனது உயிரை கிருத்திகா பணயம் வைத்திருக்க மாட்டார் என அவரது சகோதரர் கேள்வி எழுப்பினார். இருப்பினும், அதற்கான பதில்கள் கிடைக்கவில்லை. பாலிவுட் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற பல கனவுகள் கிருத்திகாவுக்கு இருந்தது. இருப்பினும், அந்த கனவுகள் அனைத்தும் 27 வயதிலேயே முடிவுக்கு வந்தன.

    English Summary

    Bollywood actress Kritika Chaudhary was found dead inside her Mumbai apartment in 2017(பாலிவுட் பிரபலம் கொலை வழக்கு): Bollywood Actress Murder Case latest news in tamil.