மும்பை: பம்பாய் உயர் நீதிமன்றம் மதமாற்றம் தொடர்பான வழக்கில் கொடுத்துள்ள தீர்ப்பு தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.. மதம் மாறினால் பணம், குழந்தைகளின் படிப்புச் செலவு, வீடு கட்டித் தருவது என ஆசை காட்டியதாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.. ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றம் ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியைச் சேர்ந்த ஜோசப் குடாவந்த், அவரது மகன் விக்டர் குடாவந்த், மருமகள் எல்வினா குடாவந்த் மற்றும் சமூக ஆர்வலர் ஆனந்த் மங்கர் ஆகிய 4 பேர் மீதுதான் இந்த வழக்கு தொடரப்பட்டது..
இவர்கள் இந்து மதத்தை சேர்ந்த தம்பதியரை கிறிஸ்தவ மதத்துக்கு மாறச் சொல்லி வற்புறுத்தினார்களாம்.. மதம் மாறினால் மாதந்தோறும் பணம் கொடுப்பதாகவும், குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாகவும், வீடு கட்டித் தருவதாகவும், ஏகப்பட்ட ஆசைகளை காட்டியிருக்கிறார்கள்.. இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் போலீசில் புகார் தரப்பட்டது.. போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் தங்கள் மீதான வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யுமாறு மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சந்த்வானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தன்னுடைய உத்தரவில், "மதத்தைப் பரப்புவது என்பதையும், மற்ற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. இந்த வழக்கில் அதிகபட்சமாக, புகார்தாரரையும், அவரது மனைவியையும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் வற்புறுத்தினார்கள் என்பது மட்டுமே அவர்கள் மீதான குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் மத நம்பிக்கைகளை அவர்கள் புண்படுத்தவில்லை. ஒருவரை மதமாற்றம் செய்ய வலியுறுத்துவது எந்தவொரு பிரிவினரின் மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஆகாது" என்று குறிப்பிட்டார். அத்துடன், 4 பேர் மீதான முதல் தகவல் அறிக்கையையும் (FIR), குற்றப்பத்திரிகையையும் நீதிபதி ரத்து செய்தார்.. இந்த வழக்கில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது.. இந்தச் சம்பவம் 2025-ல் நடந்துள்ளது.. ஆனால், மகாராஷ்டிராவில் சட்டவிரோத மதமாற்றத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டம் 2026 ஆகஸ்ட் 28-ம் தேதிதான் அமலுக்கு வந்தது.. மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு சட்டவிரோதமாக மதமாற்றம் செய்வதை தடை செய்வதற்கும் மராட்டிய அரசு கொண்டு வந்த சட்டம் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதியில் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது..!!பம்பாய் உயர்நீதிமன்றம்
டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்!
4 பேர் மீது வழக்கு
காஷ்மீரிலேயே ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி.. தமிழகத்தில் மட்டும் ஏன் மறுப்பு? உயர் நீதிமன்றம் கேள்வி!
மதமாற்றம் வற்புறுத்தல்