அரசு பள்ளிகள் குறித்து ஆய்வு.. கரப்பான் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே மீது FIR!

  • மும்பை: அரசு பள்ளியில் ஆய்வை மேற்கொண்ட CJP தலைவர் அபிஜித் தீப்கே மீது மகாராஷ்டிரா பாஜக அரசு FIR பதிவு செய்திருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

    Advertisement

    நாடு முழுவதும் அரசு பள்ளிகள் மோசமான நிலைமையில் இருக்கிறது என்றும், உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கரப்பான் ஜனதா கட்சி (CJP) 'பள்ளிகளை சரி செய்' எனும் இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறது. இந்த இயக்கத்தின் நோக்கம்.. அரசு பள்ளிகளை ஆய்வு செய்து, அதன் குறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான். இப்படி அரசு பள்ளியில் ஆய்வை மேற்கொண்ட CJP தலைவர் அபிஜித் தீப்கே மீது மகாராஷ்டிரா பாஜக அரசு FIR பதிவு செய்திருக்கிறது.

    Advertisement

    புனேவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற தீப்கே, அங்குள்ள மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும கழிவறை வசதிகள் குறித்து வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக ஷேராகியிருந்தது.

    இப்படி இருக்கையில் தீப்கே மீது பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா போலீஸ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் FIR போட்டப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது. முறையான அனுமதியின்றி அரசு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊரிய்களின் பணியில் குறுக்கிட்டது, பள்ளியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    முன்னதாக தீப்கே வெளியிட்டிருந்த வீடியோவில் பள்ளியின் நிலைமை தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பள்ளியின் கழிவறை பயன்படுத்த முடியாமலும், தண்ணீர் வசதி இல்லாமலும் இருந்தது. சமையல் கூடம் இந்தியா சுதந்திரம் வாங்கியபோது கட்டியது போல இருந்தது. வகுப்பறைகள் ஏகப்பட்ட பிரச்சனைகள், மாணவர்கள் சிலருக்கு மாட்டு தொழுவத்தில் ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். இதையெல்லாம் சரி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. அரசின் கவனத்திற்கு இந்த குறைகளை கொண்டு வந்தால் FIR போடுவது எந்த வகையில் நியாயம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    English Summary

    CJP convenor Abhijeet Dipke: The Maharashtra BJP government has registered an FIR against CJP President Teesta Setalvad, who conducted an inspection at a government school. Various quarters have expressed strong opposition to this move.