மும்பை CJP போராட்டத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன்! பாலிவுட் நடிகர்களும் ஆதரவு!

  • மும்பை: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி மும்பையில் பெரிய போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. இந்த போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் கொள்ளு பேரனான துஷார் காந்தி உள்ளிட்டோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

    Advertisement

    கொஞ்ச நாட்களுக்கு முன்னர் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டம் போல.. இந்த போராட்டமும் பெரியதாக வெடித்திருக்கிறது.

    Advertisement

    மும்பை சிவாஜி பூங்காவில் கூடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும் காவல்துறையின் தடையை மீறி ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு ஞானேஷ் வெளியேற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    போராட்டக்காரர்கள் 2 முக்கியமான கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். SIR நடவடிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, தலைமை தேர்தல் ஆணையர் ஞனேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். முறைகேடுகளுக்கு காரணமான தேர்தல் ஆணையர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    அதேபோல தற்போதுள்ள SIR திருத்த பட்டியலை நிறுத்தி விட்டு 2025ம் ஆண்டின் வாக்காளர் பட்டியிலின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்த வேண்டும். அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் முறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும். இதில் சிவில் சமூக அமைப்புகளும் சேர்க்கப்பட வேண்டும். இதுதான் போராட்டக்காரர்களின் டிமாண்ட்

    Advertisement

    இந்த போராட்டத்திற்கு மகாராஷ்டிராவின் முக்கிய எதிர்க்கட்சிகளான சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனை ஆகிய கட்சிகள் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன. உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளனர்.

    மாணவர் அமைப்புகளான SFI மற்றும் AISF அமைப்பை சேர்ந்த ஆர்வலர்கள் பெருமளவில் பங்கேற்றிருக்கின்றனர். இவர்களுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் மற்றும் சமூக ஆர்வலரான துஷார் காந்தி, பழம்பெரும் பாலிவுட் நடிகர்களான சபானா ஆஷ்மி, நசிருதீன் ஷா மற்றும் பிரபல பாடகர் விஷால் தத்லானி போன்ற முக்கிய பிரபலங்களும் நேரில் வந்து தங்ககளின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே பேசுகையில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த தொடர் போராட்டங்கள் ஓயாது என்றும், மும்பையில் தொடங்கியிருக்கும் இந்த எழுச்சி.. விரைவில் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.

    English Summary

    Tushar Gandhi: The Cockroach Janata Party has launched a massive protest in Mumbai against the Chief Election Commissioner. Mahatma Gandhi's great grandson Tushar Gandhi and others have come and expressed their support for this protest.