களமிறங்கும் கரப்பான் பூச்சி படை! போலீஸ் அனுமதி மறுத்தாலும் பின்வாங்காத CJP! சிறை நிரப்பும் போராட்டம்

  • மும்பை: அக்டோபர் 2ம் தேதி மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். போலீஸா் அனுமதி மறுத்திருந்தாலும் கூட அதே இடத்தில் சிறை நிரப்பம் போராட்டம் நடத்த போவதாக அக்கட்சியினர் நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த ஜூன் மாதம் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் நாடு முழுக்க மிக பெரிய ஆதரவு கிடைத்தது. மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், அப்போது கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இந்த போராட்டத்திற்கு பிறகு கரப்பான் பூச்சி கட்சியினர் செயல்பாடுகள் உற்று கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர்

    இதற்கிடையே இப்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் முடிவுகளுக்கு மற்ற தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் இந்த விவகாரத்தில் போராட்டத்தை நடத்த போவதாகவும் கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது.

    சிறை நிரப்பும் போராட்டம்

    மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் வரும் அக்டோபர் 2ம் தேதி இந்த போராட்டம் தொடங்கப்படும் என அறிவித்திருந்தனர். மும்பையில் தொடங்கும் இந்த போராட்டம் நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அது குடியிருப்பு பகுதி என்பதால் அங்கு போராட்டத்திற்கு அனுமதி தர முடியாது என போலீசார் கூறிவிட்டனர்.

    Advertisement

    இதற்கு மிக கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் திப்கே, மும்பையில் அதே சிவாஜி பார்க்கில் அக்டோபர் 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி சிவாஜி பார்க்கில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தால், இந்தப் போராட்டத்தை நடத்துவோம் என திப்கே எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும், "அக்டோபர் 2ம் தேதி எங்கள் போராட்டத்துக்கும் மும்பை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். குடிமக்களின் குரலை ஒடுக்க இதுபோன்ற உத்திகள் ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டம் நடத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டால், காந்தி ஜெயந்தியன்று மும்பையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்" என்று திப்கே கூறியுள்ளார்..

    Advertisement

    போலீஸ் கூறுவது என்ன?

    சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தற்போதுள்ள நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மகாராஷ்டிரா அரசின் வழிகாட்டுதல்களின்படி அனுமதி வழங்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போராட்டத்தை நடத்துவதற்கு மும்பையில் வேறு இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மாற்று இடத்துக்கான விண்ணப்பம் கிடைத்தால், அது உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    3 கோரிக்கைகள்

    அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள போராட்டம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டமாகும். இந்த விகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக ஞானேஷ் குமார் பதவி விலகுவதுடன், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    Advertisement

    இரண்டாவதாக எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை நிறுத்தி, 2025 ஜனவரி மாதம் இருந்த வாக்காளர் பட்டியலை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான 2023-ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்வதுடன், தேர்தல் ஆணையத்தில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கோரியுள்ளது.

    English Summary

    Cockroach Janata Party founder Abhijit Deepke has announced a “Jail Bharo” protest at the same venue on October 2(சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி): Cockroach Janata Party latest news in tamil.