வேண்டாம்டா மகனே.. டிரெண்ட்டிங்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.. நிறுவனரின் பெற்றோருக்கு நேர்ந்த கதி

  • டெல்லி: இந்தியாவில் பேசும்பொருளாக உள்ள 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' எனும் சமூக வலைதள பக்கங்கள் உள்ளன. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்தவரும், அமெரிக்காவில் படிக்கும் அபிஜித் திப்கே தொடங்கி உள்ளார். இளைஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலகோடி பேர் இணைந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாக கூறி தற்போது அதன் சமூக வலைதள பக்கங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கி உள்ளது. இந்நிலையில் தான் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' நிறுவனராக இருக்கும் அபிஜித் திப்கேவின் பெற்றோர் பெரும் கவலையில் உள்ளனர்.

    Advertisement

    'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party) என்ற சமூக வலைதள பக்கம் கடந்த 16ம் தேதி தொடங்கப்பட்டத. இதனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கோடிகளை கடந்துள்ளது. பாஜகவை விட இந்த கட்சியின் வலைதளத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

    Advertisement

    இன்ஸ்டாகிராமில் அந்த பக்கத்தை 19 மில்லியனுக்கும் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) அதிகமானவர்கள் பின்தொடர்ந்தனர். எக்ஸ் வலைதளத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்ந்தனர். குறிப்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த பக்கங்களை ஃபாலோ செய்ய தொடங்கினர். இதற்கிடையே தான் இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டன.

    அமெரிக்காவில் இருந்து செயல்பாடு

    மேலும் இதுதொடர்பாக உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த கட்சியை தொடங்கியவரின் பெயர் அபிஜித் திப்கே. மகாராஷ்ராடிவை சேர்ந்தவர் இவர் புனேவில் ஜார்னலிசம் படிப்பை முடித்தார். அதன்பிறகு மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் ரிலேஷன் என்ற துறையில் மாஸ்டர் படிப்பை படித்து வருகிறார்.

    Advertisement

    இவரது சகோதரி அமெரிக்காவில் உள்ளார். இதனால்அவரும் மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்று படித்து வருகிறார். இந்நிலையில் தான் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கும் அபிஜித் திப்கேவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

    கவலையில் பெற்றோர்

    இந்நிலையில் தான் அபிஜித் திப்கேவின் பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவரது பெற்றோர் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் வசித்து வருகின்றனர். தந்தை பெயர் பகவான் திப்கே. தாய் பெயர் அனிதா திப்கே. இந்நிலையில் தான் அவர்கள் இருவரும் கூறியுள்ளதாவது: எஙகளின் மகனின் புகழ் இன்னும் அதிகரித்து வருகிறத. அரசியல் கருத்துகளை அவர் கூறுவது எங்களுக்கு பயமாக உள்ளது.

    Advertisement

    ஏனென்றால் இன்றைய அரசியலை நாம் பார்க்கும் போது அவருக்கு எவ்வளவு பின்தொடர்பவர்கள் இருந்தாலும், பயம் ஏற்படுவது இயல்புதான். சமீபத்தில் ஒரு இண்டர்வியூவில் இந்தியா திரும்பிய பிறகு கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தை அவனே வெளிப்படுத்தியுள்ளான். மேலும் இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் சமீபத்தில் செய்தி தாள்களில் படித்துள்ளோம். இதனால் எங்களுக்கு அச்சமாக உள்ளது'' என்றனர். இது போன்ற சம்பவங்களை நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

    அரசியல் வேண்டாம் என தாய் அட்வைஸ்

    தாய் அனிதா கூறுகையில், ''எனது மகன் அரசியலில் இருந்து விலகி ஒரு தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அமெரிக்காவில் இருந்து அவன் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும். அவன் அரசியலில் தொடர்வது அவரது முடிவாக இருக்கலாம், ஆனால் அதில் ஈடுபட வேண்டாம் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் சொல்வதை கேட்பானா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவனது அரசியல் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

    Advertisement

    முன்பு ஆம்ஆத்மி கட்சியில் அவன் செயல்பட்டபோதும் எதிர்ப்பு தான் தெரிவித்தோம். அவன் அரசியலுக்கு செல்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இப்போதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்பான விஷயத்தை எனது குடும்பத்தினர், பக்கத்து வீட்டார் சொல்லி தான் எங்களுக்கு தெரியவந்தது. எனது '' என்று கலங்கினார்.

    2 நாட்களாக தூக்கமில்லை

    அதேபோல் தந்தை பகவான் திப்கே கூறுகையில், ''என் மகன் பிரபலமாகி இருப்பதால் நாங்கள் கவலையடைகிறோம். ஏனென்றால் இதுபோன்ற பிரபலங்கள் கைது செய்யப்டுகிறார்கள். அவனுக்கு என்னாகுமோ என்று கவலைப்பட்டு கடந்த இரண்டு இரவுகளாக நாங்கள் தூங்கவில்லை. எனக்கு அரசியல் பிடிக்கவில்லை, அதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை" என்றார்.

    English Summary

    Cockroach Janta Party: Cockroach Janta Party founder Abhijit Dipke, a native of Maharashtra who is currently pursuing his studies in the United States. Amidst this situation, the parents of Abhijit Dipke-the founder of the "Cockroach Janta pary "-are deeply distressed.